புதன், 17 மே, 2023

தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் செயலை பலரும் பாராட்டு.16.05.23

யாழ் தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் சிறுவர்கள், கர்ப்பவதிகளுக்கு 63,000 ரூபா சத்துமா பொருட்கள் வழங்கப்பட்டது
தொண்டைமானாறு தெற்கு, கெருடாவில் தெற்கு 
பிரதேசங்களில் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் தெரிவு செய்யப்பட்ட சிறுவர்கள், கர்ப்பவதிகள் அடங்களாக 3000 ரூபா 
பெறுமதியான சத்துணவுப் பொருட்கள் ( பயறு, உழுந்து, 
கௌப்பி, சோளம், கடலை, அரிசி, சீனி) 21 பேருக்கு 1ம் கட்டமாக வழங்கப்பட்டதுடன் தொடர்ச்சியாக மாதாந்தம் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ் உதவித் திட்டம் சந்நிதியான் ஆச்சிரமத்தில் வைத்து ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் வழங்கி வைத்தார். இவ் நிகழ்வில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
என்பது குறிப்பிடத்தக்கது .

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>திங்கள், 3 அக்டோபர், 2022

புராதன சின்னமான யாழ் கோட்டைக்கு செல்பவர்களுக்கு எச்சரிக்கை தகவல்

யாழ்ப்பாணத்தின் புராதன சின்னமாக காணப்படும் யாழ்.கோட்டை பகுதியில் கலாசார சீரழிவுகளும், போதைப்பொருள் பாவனைகளும் இடம்பெறுவதாக பல்வேறு சமூக ஆர்வலர்களால் எமக்கு சுட்டிக் கட்டப்பட்டிருக்கின்றன என யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன்
 தெரிவித்துள்ளார்.
கோட்டை பகுதியில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,“பல்வேறு மட்டங்களில் இதன் பிரதிபலிப்பு உணரப்பட்ட நிலையில் பொலிஸாருடனும், இது தொடர்பாக வெவ்வேறு தரப்பினர் தொடர்புகளை மேற்கொண்டு
இதனை கட்டுப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.நீதிபதிகளும் இது தொடர்பாக யாழ்.மாநகரசபையின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள்.யாழ்.கோட்டைப் பகுதியினை சுற்றி இருக்கின்ற பற்றைக்காடுகளை அகற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
இதனடிப்படையில் நான்.03-10-2022. இன்றைய தினம் நேரடியாக கோட்டை பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு இங்கு நடைபெறுகின்ற விடயங்களை அவதானித்தேன்.இதன்போது எங்கள் கண் முன்னே சமூதாய சீரழிவுகளும், போதைப்பொருள் பாவனையும் நடைபெற்றுக்கொண்டிருந்தன.
எனவே எதிர்காலத்தில் இந்த பகுதி திடீர் திடீரென
 பொலிஸ் உடனான எங்கள் சுற்று வளைப்புக்கள், கண்காணிப்பு பணிகளுக்குள் உள்ளாக்கப்படும் என்பதை பொது மக்களின் கவனத்திற்கு எச்சரிக்கை தகவல் மீறினால் சட்ட நடவடிக்கைஎடுக்கபப்டும்கொண்டு வருகின்றோம்.”என கூறியுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>சனி, 24 செப்டம்பர், 2022

நாட்டில் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைவோருக்கு புலமைப்பரிசில்

 இலங்கையில் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் முதற்தடவையிலேயே சித்தியடைந்து க.பொ.த உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து புலமைப்பரிசில் பெற்றுக் கொடுக்கும் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கமைய புலமைப்பரிசில் பெறுவதற்காக ஒரு கல்வி வலயத்திலிருந்து தகுதியுடைய 30 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.அதன்படி நாடு முழுவதுமுள்ள 99 கல்வி வலயங்களின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் 2970 மாணவர்களுக்கு இப்புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது.
புலமைப்பரிசில் வழங்குவதற்காக தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு, அவர்கள் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் வரை மாதாந்தம் 5,000/- ரூபா வீதம் ஆகக்கூடியது 24 மாதங்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வருட க.பொ.த சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி க.பொ.த உயர்தர கல்வியாண்டு ஆரம்பிக்கப்பட்டதும் இந்த புலமைப்பரிசில் வழங்குவதற்கான விண்ணப்பங்களை கோரும் வகையில் பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிடப்படும் எனவும் 
அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாகாண பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு துரிதமாக அறிவிக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க 
பணிப்புரை விடுத்துள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>புதன், 21 செப்டம்பர், 2022

நாட்டில் விளையாட்டுக்கு அடிமையாகி தாயின் வங்கி கணக்கில் மகன் மோசடி

இலங்கையில் ரக்வான பிரதேசத்தில் இணைய விளையாட்டுகளுக்கு அடிமையான மாணவர் ஒருவர் தனது தாயின் வங்கிக் கணக்கிலிருந்து  இரண்டு லட்சத்து 8 ஆயிரம் ரூபாவை மோசடியான முறையில் பெற்று இணைய விளையாட்டுகளில் ஈடுபட்டதாக செய்தி 
வெளியாகியுள்ளது.
அந்த பகுதியில் வசிக்கும் பதினைந்து வயது மாணவன் இரத்தினபுரியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருவதால் இணையம் மூலம் கல்வி கற்க பெற்றோர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கையடக்க தொலைபேசி ஒன்றை வழங்கியுள்ளனர்.
மாணவரின் தாயார் அரச அலுவலகத்தில் பணிபுரிபவர் எனவும் தந்தை வர்த்தகர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவன், ஒன்லைன் மூலம் கல்வி கற்காமல், ஒன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகியுள்ளார்.
தாயின் பெயரில் உள்ள வங்கி கணக்கு தொடர்பான தகவல்களுக்கு மகனின் தொலைபேசி இலக்கத்தை வங்கிக்கு 
வழங்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக அவரது வங்கிக் கணக்கின் தரவுகள் அனைத்தும் மகனின் தொலைபேசியில் கிடைத்துள்ளதுடன், இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மாணவன் சில காலமாக ஒன்லைன் விளையாட்டுகளை விளையாடியுள்ளார்
இது தொடர்பில் எதுவுமே தெரியாத தாய், நேற்று முன்தினம் வங்கிக்கு பணம் எடுக்க சென்றுள்ளார். ​​தனது கணக்கில் இரண்டு லட்சத்து எட்டாயிரம் ரூபாய் குறைவாக இருந்ததை அறிந்த தாய், வங்கியில் முறைப்பாடு 
செய்துள்ளார்.
கணக்கை கண்காணித்த அதிகாரிகள் தாயின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை பயன்படுத்தி ஒன்லைன் விளையாட்டுகளுக்கு மகன் ஈடுபட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>புதன், 24 ஆகஸ்ட், 2022

யாழ் நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு விசேட அறிவிப்பு

நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்கள் தங்க ஆபரணங்களை அணிந்து வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வடக்கு மாகாணத்துக்கு பொறுப்பான மூத்த பிரதிப்பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜயசூர்ய தெரிவித்துள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா இன்று காலை 6 மணிக்கு வசந்தமண்ட வழிபாட்டுடன் ஆரம்பமாகி 
இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில்,தேர்த்திருவிழாவில் பங்கேற்கும் அடியவர்கள் தங்க நகைகள் மற்றும் பணத்தை எடுத்துச் செல்வதைத் தவிர்க்குமாறும்
 வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
டந்த வருடம் கொவிட்-19 நோய்த்தொற்று பரவல் காரணமாக நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்த தேர்த்திருவிழா கட்டுப்பாடுகளுடன் இடம்பெற்றது.
எனினும் இம்முறை வழமை போன்று 
பெருந்திரளான
 அடியவர்கள் பங்கேற்பர். வெளிநாடுகளிலிருந்தும் பல ஆயிரக்கணக்கானோர் நல்லூரானை தரிசிக்க வருகை தந்துள்ளனர். அதனால் திருடர்களின் கைவரிசை அதிமாக இருக்கும்.
அத்துடன், வீட்டில் ஒருவராவது தங்கியிருப்பதுடன் அல்லது பாதுகாப்பாக வீட்டை மூடி ஆலயத்துக்குச் செல்ல வேண்டும். வழமைபோன்று சீருடை மற்றும் சிவில் உடையில் பொலிஸார் கடமைக்கு 
அமர்த்தப்பட்டுள்ளனர்.
எனினும் திருடர்கள் மற்றும் கொள்ளையர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்பட்டு அடியவர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
ஆலயத்துக்கு வருகை தரும் அடியவர்கள் தமது தங்க நகைகள் மற்றும் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இயன்றளவு நகைகளை அணிவதைக் குறைப்பதுடன் பணத்தினை எடுத்து வருவதைத் 
தவிர்க்க வேண்டும்.
மேலும்,பெருமளவு பொலிஸார் உற்சவ காலக்கடமையில் அமர்த்தப்பட்டுள்ள போதும் பல்வேறு நடவடிக்கைகளை அவர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>


ஞாயிறு, 3 ஜூலை, 2022

வீசா இன்றி பாஸ்போர்ட் மட்டும் போதும் செல்லக் கூடிய நாடுகளின் பட்டியல் வெளியீடு

உலகில் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் இலங்கைக்கு 83 ஆவது இடம் கிடைத்துள்ளது.
உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் கடவுசீட்டுகளின் அடிப்படையில் பாஸ்போர்ட் இன்டெக்ஸ் நிறுவனத்தினால் இந்த தரப்படுத்தல் 
வெளியாகி உள்ளது.
ஒவ்வொரு நாட்டின் கடவுச்சீட்டும் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்ற பட்டியல் ஒவ்வொரு வருடமும் வெளியிடப்படுகிறது. விசா பெறாமல் வேறு நாட்டிற்கு பயணிக்கும் கடவுச்சீட்டின் திறனைப் பொறுத்து இந்த 
தரவரிசை மாறுபடும்.
அதற்கமைய, இந்த பட்டியலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முன்னிலையில் உள்ளது. அந்த கடவுச்சீட்டை வைத்திருப்பவர் விசா இல்லாமல் 115 நாடுகளுக்குள் நுழைய முடியும். நுழையும் போது விசா பெறக்கூடிய நாடுகளின் எண்ணிக்கை (Visa On Arrival) 55 ஆகும். 28 நாடுகளுக்கு 
மட்டுமே முன் விசா தேவையாக உள்ளதென 
குறிப்பிடப்படுகின்றது.
இந்த தரவரிசையில் இலங்கைக்கு 83வது இடம் கிடைத்துள்ளது. 12 நாடுகளுக்கு விசா இன்றி இலங்கை கடவுச்சீட்டுடன் நுழைய முடியும். Visa On Arrival விசாவின் மூலம் 37 நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் வழங்கப்படுகின்றது.
இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர் 
உலகெங்கிலும் உள்ள 147 நாடுகளுக்குள் நுழைவதற்கு முன்கூட்டியே விசாவைப் பெற வேண்டும். பாஸ்போர்ட் இன்டெக்ஸ் 
சுட்டெண் தரவுக்கு அமைய, இலங்கை கடவுச்சீட்டுடன் 
வீசா பெறாமல் Bahamas, Barbados, Dominica, Gambia, Grenada, Haiti, Lesotho, Saint Kitts, Nevis, Singapore, St. Vincent, the Grenadines, Tajikistan மற்றும் Venezuela ஆகிய நாடுகளுக்கு நுழைய முடியும்.
இதேவேளை, The Henley Passport Index Q2 2022 உலகளாவிய தரவரிசையின் படி, இலங்கை 103வது இடம் கிடைத்துள்ளமை 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>ஞாயிறு, 26 ஜூன், 2022

இலங்கையில் அரச ஊழியர்களுக்கான புதிய சுற்றுநிருபம் வெளியீடு

இலங்கையில் அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் புதிய சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.அரச நிறுவனங்களின் செயற்பாடுகளை வீழ்ச்சியடையாது தொடர்ந்தும் மறு அறிவித்தல் வரை குறைந்தளவிலான பணிக்குழாமினரை 
அன்றாட சேவைக்கு
அழைக்குமாறு அரச நிறுவன தலைவர்களுக்கு அறிவுறுத்தி சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான சுற்று நிருபம் ஒன்று.26-06-2022. இன்றைய திகதியிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி,
நிறுவனங்களின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தேவையான குறைந்தபட்ச ஊழியர்களை மாத்திரம் சேவைக்கு 
அழைக்குமாறு நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இயன்ற வரையில் பணியாளர்களை வீட்டில் 
இருந்தவாறே பணியாற்ற அனுமதிக்குமாறும் குறித்த 
சுற்றுநிருபம் மூலம் நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது .

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>Blogger இயக்குவது.