திங்கள், 26 டிசம்பர், 2016

பிரதான வீதியான ஏ9 வீதியில் பயணிக்கும் அனைத்து மக்களின் கவனத்திற்கு:!

சிறீலங்காவின் பிரதான வீதியான ஏ-9 நெடுஞ்சாலையில் 2016ஆம் ஆண்டு மாத்திரம் அதிக பட்ச விபத்துக்கள் நடந்துள்ளதாகவும், இவ்விபத்தில் 117 உயிர்கள் காவுகொள்ளப்பட்டன எனவும் காவல்துறைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்தவகையில், அண்மையில் சாவகச்சேரி, சங்கத்தானைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தும் இதற்குள்ளேயே அடங்கும்.
இந்த விபத்தில் 10 அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயங்களுக்குள்ளாகி மருத்துவமனையில்
 உயிரிழந்தார்.
ஏ-9 நெடுஞ்சாலையில் அதிகளவிலான விபத்துக்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களுக்குட்பட்ட பகுதிகளிலேயே இடம்பெற்றுள்ளன என்றும் இந்த தரவுகளின் மூலம் 
தெரியவந்துள்ளது.
போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாலும், மதுபோதையில் வாகனங்களைச் செலுத்தியதாலுமே இவ்விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 18 டிசம்பர், 2016

யாழில் இடம்பெற்ற பஸ் .வேன் விபத்தில் 10 பேர் பலியானர்கள் !

 சாவக்கச்சேரி பகுதியில்.17.12.2016. இடம்பெற்ற வாகனவிபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர்.
யாழ்ப்பாணம் - வவுனியாவிற்கு இடையில் இயங்கும் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் உடன் வேன் ஒன்று நேர்க்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
குறித்த விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 விபத்தின் நிழல் படங்கள் இணைப்பு ...  
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஞாயிறு, 11 டிசம்பர், 2016

”நாடா” சூறாவளி: இந்தியாவை நோக்கி நகரும் பலத்த மழை பெய்யக்கூடும் !

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பிராந்தியத்தில் உருவான ”நாடா” சூறாவளி இன்று இரவு யாழ். குடாநாட்டை அண்மித்து இந்தியாவை நோக்கி நகரவுள்ளதால் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இந்த சூறாவளியின் தாக்கத்தினால் காற்றின் வேகமும் அதிகரிக்கலாம் என அறிவறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையிலிருந்து 480 கிலோமீற்றர் தொலைவில், வங்காள விரிகுடாவின் தென்மேற்கு பிராந்தியத்தில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம் சூறாவளியாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அடுத்த 12 மணித்தியாலங்களில் சூறாவளி வலுப்பெற்று, வடமேல் திசையில் யாழ். குடாநாட்டை அண்மித்து நகர்வதற்கான சாத்தியம் உள்ளதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது
இதன் விளைவாக டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் கடும் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழகத்தின் திருநெல்வேலி, நாகப்பட்டிணம், காஞ்சிபுரம், சென்னை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் துறைமுகம், பாம்பன் துறைமுகம், சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் ஆகிய இடங்களில் இரண்டாம் எண் சூறாவளி எச்சரிக்கைக் கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளதாக தமிழகத்திலுள்ள எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.
நாடா புயல் காரணமாக சென்னை, நாகை, காஞ்சிபுரம், கடலூர், திருநெல்வேலி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு நாளையும் (01) நாளை மறுதினமும் (02) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதனைத்தவிர, விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம், வானூர் தாலுக்காவிலுள்ள பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பாடசாலைகளுக்கும் இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்
இன்றிரவு சூறாவளி சென்னையை அண்மித்து, ஆந்திராவின் ஊடாக நகரும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
இதனால் அநேகமான மீனவர்கள் இன்று கடற்றொழிலுக்கு செல்லவில்லை என இராமேஸ்வரத்தில் உள்ள எமது செய்தியாளர்கள் 
கூறினர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 3 டிசம்பர், 2016

தீர்த்தக்கரை புகழருவி ஒளி விழா நிகழ்வு

 தீர்த்தக்கரை புகழருவியில் உள்ள சிறுவர் பாடசாலையில் ஒளி விழா நிகழ்வுகள்.2/12/2016. சிறப்பாக நடந்தேறியது
அங்கே நடந்த ஒளிவிழாவில் கலைஞர் கு.யோகேஸ்வரன் அழைக்கப்பட்டு அவர்கையால்
சிறுவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான பரிசில்
 வழங்க்கப்பட்டது ,
இந்த கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டதையிட்டு கலைஞர் கு.யோகேஸ்வரன் மக மகழ்வாக கருதிவா அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து நின்றார்
.நிழல் படங்கள் இணைப்பு ..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 21 நவம்பர், 2016

டுபாயில் புலம்பெயர்து தொழில் பணிபுரிவோருக்கு அவசர அறிவித்தல்!

இலங்கை மற்றும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து டுபாய்க்கு வேலைக்காக செல்லும் புலம் பெயர் தொழிலாளர்கள் தங்களுக்கான மருத்துவ காப்புறுதியை உடனடியாக பெற்றுக் கொள்ளுமாறு அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

அவ்வாறு மருத்துவ காப்புறுதி பெற்றுக் கொள்ளாதவர்கள் மாதாந்தம் 500 திர்ஹம் அபராதமாக செலுத்த வேண்டும் என டுபாய் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மருத்துவ காப்புறுதி பெற்றுக் கொள்ளுமாறு கடந்த ஜூன் மாதம் அரசாங்கம் அறிவித்திருந்தது,குறித்த காலம் நிறைவடைந்த நிலையிலும் டுபாயில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களில் 12 வீதமானவர்கள் தங்களுக்கான மருத்துவ காப்புறுதிகளை பெற்றுக் கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.

எனவே,மருத்துவ காப்புறுதி பெற்றுக் கொள்ளாதவர்கள் மாதாந்தம் 500 திர்ஹம் அபராதமாக செலுத்த வேண்டும் என டுபாய் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான மருத்துவ காப்புறுதியை அவர்கள் தொழில் புரியும் நிறுவனங்கள் மற்றும் தொழில் வழங்குநர்களே பெற்றுக் கொடுக்க வேண்டும்.மேலும்,இதற்கான பணத்தை புலம்பெயர் தொழிலாளிகளிடம் அறவிடுவது சட்டவிரோதமான செயல் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வீட்டுப் பணிப்பெண்கள், வீட்டுச் சாரதிகளுக்கு அவர்களுடைய முதலாளிகளே மருத்துவ காப்புறுதியை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

அபுதாபியில் மருத்தவ காப்புறுதி முன்னதாகவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் மருத்துவக் காப்புறுதி இருந்தால் மட்டுமே குடும்பங்களை வரவழைப்பதற்கான வீசா அனுமதி வழங்கப்படும் என்பது
 குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 18 நவம்பர், 2016

இடது விரலுக்கு திருமண மோதிரம் அணிவதற்கான காரணம் என்ன !

திருமண பந்தத்தில் இணையவிருக்கும் ஆண், பெண் இருபாலரும் தங்கள் விரல்களில் ஒருவருக்கொருவர் மோதிரம் மாற்றிக்கொள்வர்.
இதில் மாறிக்கொள்வது இரு மோதிரங்கள் மட்டுமல்ல, இருவரது இதயங்களும் தான்.
ஆனால், காலங்காலமாக இடது கையில் உள்ள நான்காவது விரலில் தான் இந்த திருமண மோதிரத்தை அணியவேண்டும் என்ற கருத்து நிலவிவருவதோடு மட்டுமல்லாமல் மக்களும் இதனை பின்பற்றி வருகிறார்கள்.
ஆனால் அறிவியல் ரீதியாக பார்த்தால், இரத்தஓட்ட அமைப்பு(Circulatory System) எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து Tudor times ஆராய்ச்சி நடத்தியது.
இதில், இரது விரலுக்கும், இதயத்திற்கும் ஒருவித தொடர்புள்ளது, அதாவது, இடது கையில் நான்காவது விரலில் உள்ள நரம்பு நேரடியாக இதயத்துடன் இணைகிறது.
இதனால் இரத்த ஓட்டம் சீராக இருக்கிறது, இதனை “காதல் நரம்பு” என்று மக்கள் அழைக்கின்றனர், அதாவது இந்த மோதிரத்தின் மூலம் பரிமாறப்படும் அன்பு நேரடியாக இதயத்திற்கு சென்று சேர்கிறது என்று மக்கள் நம்பி வருகின்றனர்.
ஆனால், திருமண மோதிரத்தை இடது கையில் தான் அணிய வேண்டும் என்று எவ்வித சட்டமும் இல்லை, உங்களுக்கு எந்த விரலில் மோதிரம் அணிந்தால் நன்றாக இருக்கும் என்று உணர்கிறீர்களோ, அந்த விரலில் அணியுங்கள்.
ஆனால், ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு கலாசாரங்கள் பின்பற்றப்படுகின்றன, பொதுவாக வடக்கு ஐரோப்பிய நாடுகளில், திருமண ஜோடிகள், வலது கையில் மோதிரம் அணிகின்றனர்.
ஆஸ்திரியா, டென்மார்க், போலந்து, ஜேர்மன் போன்ற நாடுகள் இந்த வலது கை கலாசாரத்தையே பின்பற்றுகின்றனர்.
ஜேர்மனிய ஜோடிகள், திருமணத்திற்கு முன்னர் இடது கையிலும், திருமணம் முடிந்த பின்னர் வலதுகையிலும் மோதிரத்தை மாற்றிக்கொள்கின்றனர்.
இவ்வாறு மோதிரத்தை திருமணத்திற்கு பின்னர் வேறு விரலில் மாற்றிக்கொள்வது, ஒற்றுமையின் சின்னமாக கருதப்படுகிறது.
ஆரோக்கிய பிரச்சனைகள்
நீண்ட காலமாக மோதிரத்தை அணிந்திருந்தால் சில வித ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
முடக்குவாதம், விரல்களின் வீக்கம் ஏற்படுமேயானால், நீங்கள் கண்டிப்பாக இந்த பழக்கத்தை மாற்றிக்கொள்ளலாம்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 17 நவம்பர், 2016

கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி நினைவுமண்டவிழா

யாழ் கோப்பாய் கிறிஸ்தவ  பாடசாலையின் நினைவுமண்டபத்தில் உள்ள மேடை புனரமைக்கப்பட்டு 16.11.2016 நடைபெற்ற ஒளிவிழாவின் போது பயன்படுத்தப்பட்ட
 நிழல் படங்கள்இணைப்பு 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வெள்ளி, 11 நவம்பர், 2016

சினிமாப் பாணியில் ரயிலை நிறுத்தி ரவுடிகள் அட்டகாசம்

யாழ் இணுவில் பகுதியில் சினிமாப் பாணியில் ரயிலை நிறுத்தி ரவுடிகள் அட்டகாசம் செய்வதால் பயணிகள் சிதறி ஓடுவதாகத் தெரியவருகின்றது.
குறித்த ரயிலில் பயணம் செய்ய ஆயத்தமான இளைஞன் ஒருவனை ரயிலில் ஏறித்து துரத்திய ரவுடிகள் அவனைப் பிடித்து ரயிலில் இருந்து தள்ளிக் கீழே விழுத்தியதாகவும் இதனால் ரயிலை இணுவில் பகுதியில்
 மக்கள் மறித்து 
யாழ் இணுவில் பகுதியில் சினிமாப் பாணியில் ரயிலை நிறுத்தி ரவுடிகள் அட்டகாசம் செய்வதால் பயணிகள் சிதறி ஓடுவதாகத் தெரியவருகின்றது. குறித்த ரயிலில் பயணம் செய்ய ஆயத்தமான 
இளைஞன் ஒருவனை ரயிலில் ஏறித்து துரத்திய
 ரவுடிகள் அவனைப் பிடித்து ரயிலில் இருந்து தள்ளிக் கீழே விழுத்தியதாகவும் இதனால் ரயிலை இணுவில் பகுதியில் மக்கள் மறித்து வைத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

யாரும் இனி கவலைப்பட வேண்டாம்-அரசு அதிரடி அறிவிப்பு!!

இரவு 11 மணிவரை கடைகள் திறந்திருக்க வேண்டும் என்றும், தனியார் பஸ் சேவைகளும் இரவு 11 மணிவரை சேவையில் இருக்க வேண்டும் என்றும் நிதி அமைச்சர் தெரிவித்தார்.
வரவுசெலவுத்திட்டத்தின் மீதான இரண்டாம் வாசிப்பின் போதே நிதி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
வேலை நிமித்தம் வெளியே செல்லும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் போக்குவரத்து மற்றும் உணவுவைப் பெற்றுக் கொள்வதில் சிரமம் ஏற்படுகின்றது.
இரவில் தாமதமாகி வேலையை முடித்துவிட்டு செல்பவர்களுக்கும், உறவுகளை விட்டு பிரிந்து வந்து வேலை செய்பவர்களுக்கும் இந்த நடவடிக்கை சாதகமான ஒன்றாக 
கருதப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 25 அக்டோபர், 2016

ஆனையிறவு ரயில் நிலையம்! மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது

ஆனையிறவு ரயில் நிலையம் எதிர்வரும் 28ஆம் திகதி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது.
ஆனையிறவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய ரயில் நிலையம் எதிர்வரும் 28ஆம் திகதி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் அமைச்சர்களான நிமல் சிறிபால டீ சில்வா, அகில விராஜ் காரியவசம் ஆகியோர் கலந்து
 கொள்ளவுள்ளனர்.
யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதியிலுள்ள மாணவர்கள் ரயில் மூலம், ஆனையிறவு ரயில் நிலையத்துக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை செல்வோர். இதன்மூலம் ரயில் நிலையம் உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்படும்
நாட்டிலுள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்றாக இணைந்து இந்த ரயில் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான நிதியுதவி வழங்கியுள்ளனர்.
நாட்டிலுள்ள பாடசாலை மாணவர்கள் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு இரண்டு ரூபா வீதம் வழங்கினார்கள். ஆசிரியர்கள் பத்து ரூபா வீதம் நன்கொடை வழங்கினர்.
இதன்மூலம் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான நிதி சேகரிக்கப்பட்டது. எஞ்சிய தொகையை கல்வியமைச்சு வழங்கியது.
குறித்த ரயில் நிலையத்தை அமைப்பதற்காக செலவிடப்பட்ட தொகை இரண்டு கோடி ரூபாவாகும்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வெள்ளி, 21 அக்டோபர், 2016

கடல்கரையில் 50 அடி நீளமான திமிங்கிலம் அலை மோதும் மக்கள்!

காலி மாவட்டத்தின் அம்பலாங்கொட கடற்கரையில் பாரியளவிலான உயிரிழந்த திமிங்கலங்கள் இரண்டு இன்று காலை கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரன்தோம்ப கடற்கரையில் உயிரிழந்த நிலையில் பாரிய திமிங்கலம் மற்றும் உயிரிழந்த திமிங்கலத்தின் குட்டி இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெரிய திமிங்கலம் 60 அடிக்கும் அதிகமான நீளத்தை கொண்டதுடன், குட்டி 12 அடி நீளமானதாகும். எனினும் இவை இறந்து சில வாரங்களில் இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடற்கரைக்கு வருகை தந்த வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள், இறந்த திமிங்கலத்தை பார்வையிட்டதுடன் அவற்றை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


திங்கள், 17 அக்டோபர், 2016

கனேடிய பாராளுமன்றத்தால் தமிழ் மரபுத் திங்கள் அங்கீகரிக்கப்பட்டது!

ஒட்டாவா, ஒன்றாரியோ – ஒவ்வொரு ஆண்டும் சனவரி மாதத்தை தமிழ் மரபுத் திங்களாக அங்கீகரிக்கும் எம்-24 முன்மொழிவு அனைத்துக் கட்சிகளினதும் ஏகோபித்த ஆதரவுடன் கனேடிய பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தனிநபர் முன்மொழிவாக ஸ்காபரோ-ரூஜ் பார்க் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரியால் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவு மே 20ம் திகதியும், செப்ரெம்பர் 29ம் திகதியும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. விவாதம் நடைபெற்ற இரண்டு தினங்களிலும், அனைத்து முக்கிய 
கட்சிகளையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், கனடாவெங்கும் தமிழ்-கனேடியர்கள் ஆற்றியிருக்கும் பங்களிப்புகளை சுட்டிக்காட்டி, முன்மொழிவுக்கு ஆதரவாக உரையாற்றினர்.வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பில் முன்மொழிவு 
எம்-24 ஏற்றுக்கொள்ளப்பட்டது 
ஒட்டாவா, ஒன்றாரியோ – ஒவ்வொரு ஆண்டும் சனவரி மாதத்தை தமிழ் மரபுத் திங்களாக அங்கீகரிக்கும் எம்-24 முன்மொழிவு அனைத்துக் கட்சிகளினதும் ஏகோபித்த ஆதரவுடன் கனேடிய
 பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தனிநபர் முன்மொழிவாக ஸ்காபரோ-ரூஜ் பார்க் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரியால் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவு மே 20ம் திகதியும், செப்ரெம்பர் 29ம் திகதியும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.
விவாதம் நடைபெற்ற இரண்டு தினங்களிலும், அனைத்து முக்கிய கட்சிகளையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், கனடாவெங்கும் தமிழ்-கனேடியர்கள் ஆற்றியிருக்கும் பங்களிப்புகளை சுட்டிக்காட்டி, முன்மொழிவுக்கு ஆதரவாக உரையாற்றினர்.
“அரசு ஒவ்வொரு ஆண்டும் சனவரி மாதத்தை தமிழ் மரபுத் திங்கள் என அறிவிப்பதன் மூலம், கனேடிய சமூகத்திற்கு தமிழ்-கனேடியர்கள் ஆற்றியுள்ள பங்களிப்புக்களையும், தமிழ் மொழியினதும்
 பண்பாட்டினதும் செழுமையையும், தமிழ் மரபுபற்றிய அறிவையும் புரிந்துணர்வையும் எதிர்கால தலைமுறைகளுக்கு ஊட்டவேண்டியதன் முக்கியத்துவத்தையும் அங்கீகரிக்கவேண்டும் என்பது இந்த அவையின் கருத்தாகும்” என எம்-24 முன்மொழிவு
 தெரிவிக்கிறது.
“தமிழ்-கனேடியர்கள் நாடுதழுவிய வகையில் எமது சமூகத்திற்கு ஆற்றியுள்ள அளப்பரிய பங்களிப்புக்களையும், தமிழ் மொழியினதும், மரபினதும், பண்பாட்டினதும் செழுமையையும் அங்கீகரிக்கும் வரலாற்று மைல்கல் இது” என ஸ்காபரோ-ரூஜ் பார்க் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி கூறினார்.
ஸ்காபரோ-தென்மேற்று தொகுதியின் லிபரல் பாராளுமன்ற உறுப்பினரும், நீதித்துறை அமைச்சரின் பாராளுமன்ற செயலருமான பில் பிளாயர் உரையாற்றுகையில் மிசிசாகா, டேர்கம், ஒட்டாவா, தொரன்ரோ, மார்க்கம், ஏஜக்ஸ், பிக்கரிங் உள்ளிட்ட நகரசபைகளும், ஒன்றாரியோ மாநிலமும், தொரன்ரோ கல்விச்சபையும் ஏற்கனவே சனவரி மாதத்தை தமிழ் மரபுத் திங்களாக அங்கீகரித்துள்ளதை சுட்டிக்காட்டினார். “இது எமது பொருளாதாரத்திற்கும், ஏனைய துறைகளிற்கும் தமிழ் சமூகம் தொடர்ந்தும் ஆற்றிவருகின்ற அளப்பரிய பங்களிப்புக்களிற்கு தெளிவான சான்று” என அவர் கூறினார்.
எதிர்க்கட்சி அங்கத்தவர்களும் முன்மொழிவின் முக்கியத்துவத்தை ஆதரித்து சிலாகித்தனர். “தமிழர்களின் உயிர்ப்பான பண்பாட்டையும், மரபுகளையும், நீண்ட வரலாற்றையும் சக கனேடியர்களுக்கு வெளிக்காட்டவும், அவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் இந்த முன்மொழிவு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்” என மார்க்கம்-யூனியன்வில் தொகுதிக்கான கொன்சவேற்றீவ் பாராளுமன்ற உறுப்பினர் பொப் சொரோயா விவாதத்தின்போதான தனது உரையில்
 தெரிவித்தார்.
இந்த முன்மொழிவுக்கு ஆதரவவு தெரிவிப்பது “கனடா பல்வகைமையால் பலம் பெறுகிறது” என்பதை ஏற்றுக்கொள்வதை நோக்கி முன்வைக்கப்படும் இன்னொரு அடி என வன்கூவர்-கிழக்கு தொகுதியின் என்.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் ஜெனி குவான் முன்மொழிவை ஆதரித்து ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.
“இந்த முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டதானது கட்சி எல்லைகளைக் கடந்ததோடு, பல ஆண்டுகளாக பல்வேறு அரச மட்டங்களையும் பல்வேறு அரசியல் சார்புலைகளையும் கொண்ட அரசியல்வாதிகளினதும், சமூகத்தலைவர்களினதும், சமூக அமைப்புகளினதும் ஒருங்கிணைந்த பரிந்துரையாலும் பங்களிப்புகளாலும் எட்டப்பட்ட அடைவாகும். இந்த முக்கியமான அடைவை எட்டுவதறகான எம் அனைவரினதும் ஒருங்கிணைந்த ஒருமுகப்பட்ட முயற்சிக்கு இது சான்று” என ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
முதன்முதலாக கனடா தழுவிய வகையில் பாராளுமன்றத் திடல் உட்பட்ட இடங்களிலே தமிழ் மரபுத் திங்களைக் கொண்டாடும் நிகழ்வுகள் சனவரி 2017ல் ஆரம்பமாகும். இவை கனடாவின் 150ம் ஆண்டு நிறைவையொட்டிய கொண்டாட்டங்களுடன் உடனிகழ்வது 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




வெள்ளி, 14 அக்டோபர், 2016

யாழ் நீர்வேலிக்கும் சிறுப்பிட்டிக்கும் இடையில் விபத்து- ஒருவர் பலி

 நீர்வேலிக்கும் சிறுப்பிட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். உரும்பிராயைச் சேர்ந்த  தம்பிராசா பாலேந்திரன் (வயது 54) என்பவரே உயிரிழந்தவராவார்.
முன்னே சென்ற இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துடன், மோட்டார் சைக்கிளில் சென்றவர்  பின்பக்க மாக மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை  இன்று மாலை யாழ்ப்பாணம் அரியாலை மாம்பம் சந்திக்கருகாமையில் இடம்பெற்ற மற்றொரு விபத்தில்   இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். நெடுந்தீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த தர்மகுலசிங்கம் பிரதீபன் (வயது24)என்பவரே 
உயிரிழந்தவராவார்.
இவர் பயணித்த மோட்டார் சைக்கிள் வேககட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன்   மோதியதாலேயே இவ்விபத்து சம்பவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டு ள்ளதுடன் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 13 அக்டோபர், 2016

இறைச்சிக்காக பசுக்கள் ஏழாலைப் பகுதியில் களவாடப்பட்டுள்ளதாகபுகார்

யாழ் ஏழாலைப்பகுதியில் தொடர்ச்சியாக பசுக்கள் இறைச்சிக்காக களவாடப்படுவதாக பிரதேச கால்நடை வளர்ப்போர் கவலை வெளி யிட்டுள்ளனர். 
ஏழாலை கட்டுவன் டச்சு வீதியில் நேற்று இரவு வீட்டில் நின்ற பசு ஒன்று களவாடப்பட்டுள்ளதாக உரிமையாளர் தெரிவித்தார். இதேபோல் தொடர்ச்சியாக பசுக்கள் களவாடப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். சென்ற வாரம் கன்றுத்தாச்சி பசு ஒன்று களவாடப்பட்டு இறைச்சியாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். 
அத்துடன் அதன், வயிற்றிலிருந்த கன்றை எடுத்து வீசியுள்ளனர். இதனால் நாய்கள் அவ் இறந்த கன்றை வீதியில் இழுத்து சென்றதா கவும்
 தெரிவித்தார்.  
 இப்பகுதியில்     தொடர்ச்சியாக பசுக்கள் களவாடப்பட்டு இறைச்சியாக்கப்படுகின்ற செயற்பாடானது கால்நடை வளர்ப்போருக்கு அச்சத்தை ஏற்டுத்துவதாகவும் தெரிவித்தார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



புதன், 12 அக்டோபர், 2016

தன் கணவரின் குடும்பத்தை யாழில் பார்த்து நெகிழ்ந்த தென்னாபிரிக்க மருமகள்

நமக்கு துளிர் விட்ட அழகான காதல் கதை.. (தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த 26 வயதான shan எனப்படுகின்ற இளம் ஆபிரிக்க பெண்.. யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த அவரது கணவன் விஜீந்திரன் பற்றியும்.. தனது கணவனின் ஊருக்கு வந்து தனது கணவனின் பாட்டியைச் சந்தித்தது பற்றியும்.. மிகவும் அழகாக தனது வலைத்தளத்தில் ஆங்கிலத்தில்.. அழகழகான புகைப்படங்களுடன் விபரித்து 
எழுதி இருக்கிறார்..
அவர் ஆங்கிலத்தில் எழுதி இருந்ததன் தமிழ் மொழி பெயர்ப்பை படித்துப் பாருங்கள்……
காதல் என்பது எல்லைகளே இல்லாத, வரையறைகளே இல்லாத உணர்வு. என்னுடைய காதல் நான் கனவிலே கூட நினைத்துப் பார்க்காத ஒரு ஊரையும் என்னையும் இணைத்து வைத்தது. அதே எனது காதல்தான் அற்புதமான எனது காதலனை.. எனது வாழ்க்கைத் துணைவனை எனக்கு அறிமுகப் படுத்தியது. எனது கணவன் மூலமாக எனக்கு அறிமுகமான அந்த ஊரின் பெயர் point pedro யாழ்ப்பாணம்.
நான் சிறுமியாக இருந்த போது இன்னொரு நாட்டில் இருந்து.. இன்னொரு இனத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொள்வேன் என்று.. கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை. ஆனாலும் விஜியோடு பழக ஆரம்பித்து.. சில நாட்களிலேயே.. இவன் தான் எனது கணவன் என்று நான் முடிவு செய்து விட்டேன்.
விஜி ஒரு இலங்கைத் தமிழன், யாழ்ப்பாணம் என்கிற என்கிற ஊரைச் சேர்ந்தவன். இருந்தாலும் பல ஆண்டுகளாக தென்னாபிரிக்காவில் அவர் வாழ்வதால் என்னால் சகஜமாக அவனோடு ஆங்கிலத்தில் உரையாட முடிந்தது. இந்த விஜி மூலமாகத்தான் யாழ்ப்பாணம் என்கிற புதிய உலகமும், அந்த புதிய மனிதர்களும் எனக்கு 
அறிமுகமானார்கள்.
விஜியின் சொந்த ஊர் பருத்தித்துறையில் அவனுக்கு ஒரு பாட்டி இருக்கிறார். அந்த பாட்டிக்கு 85 வயது. விஜியின் தம்பியின் கல்யாணத்திற்காக நானும்.. எனது கணவன் விஜியும்.. எங்கள் மூன்று வயதுக் குழந்தையுமாக இலங்கைக்கு போய் இருந்தோம். அந்த பயண அனுபவத்தை என்னால் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. இதற்கு முன்னால் இலங்கையில் இருக்கும் எனது கணவனின் உறவினர்களோடு நான் தொலைபேசியில் பேசியதே கிடையாது.
எனது கணவன் பேசும் தமிழை என்னால் புரிந்து கொள்ள முடிந்தாலும், என்னால் அவனைப் போல தமிழில் பேச முடியாது. முதல் முதலில் யாழ்ப்பாணம் என்கிற அந்த ஊருக்குப் போய் எனது கணவனின் உறவினர்களைச் சந்தித்த போது.. அவர்கள் என்னை எப்படி நடத்துவார்களோ என்று உள்ளுக்குள் பயம் இருந்தாலும்.. 
அங்கு போன சில 
மணி நேரங்களிலேயே.. நான் விஜியின் உறவினர்களோடு மிகவும் இலகுவாக ஒட்டி விட்டேன். மிகச் சிலருக்கே அங்கே ஆங்கிலம் பேசத் தெரிந்திருந்தது. ஆனாலும் அவர்கள் என் மேல் காட்டிய அன்பும் பாசமும் இதுவரை நான் அனுபவித்திராத ஒன்று.. இத்தனை எளிமையான அன்பான மக்களை.. இதற்கு முன்னால் நான் பார்த்ததே இல்லை.
எங்கள் கல்யாணத்தில் விஜியின் அம்மாவுக்கு விருப்பமில்லை. வெளிநாட்டில் இருக்கும் தனது மகனுக்கு தன்னுடைய ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணையே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்திருந்தார்கள். எனக்கு எனது கணவனின் அம்மாவின் முகத்தை பார்ப்பதற்கு தயக்கமாக இருந்தாலும்..
நானே ஆச்சரியப்படும் வகையில் அவர்கள் என்மீது எந்த விதமான கோபத்தையோ, புறக்கணிப்பையோ காட்டாதது எனக்கு வியப்பாக இருந்தது. குறிப்பாக எங்களது மூன்று வயதுக் குழந்தை கீர்தனாவை அவர்கள் கீழே நடக்கவே விடவில்லை.. எப்போதும் தூக்கி வைத்துக் கொண்டிருந்தார்கள்.. அங்கே இருக்கும் வயதான மனிதர்கள்.. குழந்தைகள் மேல் வைத்திருக்கும் பாசத்தைப் பார்த்து நான் பிரமித்துப் போனேன்.
என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய.. என்னால் மறக்கவே முடியாத ஒரே ஒரு நபர் விஜியின் பாட்டிதான்.. அவர்களுக்கு 85 வயது.. எனது கைகளை அந்த மூதாட்டி பிடித்துக் கொண்ட போது.. அவர்களையும் மீறி
 அவர்களது 
கண்ணீர் துளிர்ப்பதை நான் பார்த்தேன்.. இவ்வளவு அன்பான பெண்ணை என் வாழ்க்கையில் இதற்கு முன்னால் நான் சந்தித்ததில்லை. தனது பேத்தியை அவர் பாட்டுப் பாடி தூங்க வைப்பதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.. அவ்வளவு அழகாக அது இருக்கும்.
இந்தப் பாட்டிதான் (புகைப்படத்தில் இருப்பவர்) தன்னை வளர்த்ததாக எனது கணவன் விஜி பல முறை கூறி இருக்கிறான். எங்கள் கல்யாணத்தில் இந்தப் பாட்டிக்கும் பெரிதாக விருப்பமில்லை. எனது கணவருக்கு தனது பாட்டியின் மீது மிகுந்த மரியாதை இருக்கிறது. ஆனால் எங்கள்
 திருமணத்திற்குப் பிறகு 
பாட்டி அதிகம் எங்களோடு பேசுவதில்லை.. இப்போதுதான் முதல் முதல் முறையாக நேருக்கு நேர் சந்திக்கிறோம்.. ஆனாலும் இந்த 
வயதான பெண்..
எந்த விதமான முகச் சுழிப்போ.. கோபமோ இல்லாமல் என்னோடு பேசியதும் பழகியதும் எ னக்கு மிகப் பெரிய வியப்பைக் கொடுத்தது. அவருக்கு ஒரு சில ஆங்கில வார்த்தைகளே தெரிந்திருந்தது. ஆனாலும் அவர் எனது கைகளைப் பிடித்துக் கொள்ளும் போதெல்லாம்.
. எங்களுக்குள் மொழியே
 தேவைப்படவில்லை. 25 வயது தென்னாபிரிக்க கறுப்பினப் பெண்ணுக்கும்.. 85 வயதான ஒரு தமிழ் மூதாட்டிக்குமான பிணைப்பை வார்த்தைகளில் வர்ணிக்க எனக்குத் தெரியவில்லை..
நானும் பாட்டியும் பேசிக் கொள்வதற்கு எங்களுக்கு பாஜையே தேவைப் படவில்லை.. இப்படி ஒரு அன்பிற்காக நான் பல வருடங்கள் தனிமையில் ஏங்கித் தவித்திருக்கிறேன். ஒரு வயதான தாயை விட அற்புதமானதொன்று.. இந்த உலகத்தில் எங்கேயும் கிடையாது. அங்கே
 யாழ்ப்பாணத்தில் எனது கணவனின் பாட்டியோடு நாங்கள் இருந்த அத்தனை நாட்களிலும்.. நானும் எனது குழந்தையும் அவர்களை விட்டு பிரிந்திருக்கவேயில்லை. கடைசி வரைக்கும் நாங்கள் ஒன்றாகவே இருந்தோம்.. ஒன்றாகவே எல்லா இடத்துக்கும் போனோம்.. ஒன்றாகவே சாப்பிட்டோம்.. ஒன்றாகவே தூங்கினோம்..
யாழ்ப்பாணத்தை விட்டு நாங்கள் தென்னாபிரிக்கா திரும்பி வந்ததபோது.. எங்கள் குழந்தை கீர்தனா பாட்டியை விட்டு வரமாட்டேன் என்று அழுததது இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது.. கனத்த இதயத்தோடு நானும் எனது கணவனும் குழந்தைகளும் திரும்பவும் 
தென்னாபிரிக்கா வந்தோம்.
. போனிலோ.. ஸ்கைப்பிலோ.. பாட்டியோடு பேசுவது அத்தனை எளிதல்ல.. ஆனாலும் ஒவ்வொரு நாளும் பாட்டியின் முகத்தைப் பார்ப்பதற்கு இங்கே பேத்தி ஆசைப் படுகிறாள்.. தென்னாபிரிக்கைவுக்கும்..
 இலங்கைக்கும் 
வாழ்க்கை முறையில் பல வித்தியாசங்கள் உள்ளன.. இருந்தாலும் ஒவ்வொரு வருடமும் குறைந்தது ஒரு மாதமாவது நான் யாழ்ப்பாணத்தில் எனது கணவனின் குடும்பத்தோடு வாழ 
ஆசைப் படுகிறேன்.
எனது பெண் குழந்தை கீர்தனாவிற்கு.. தனது அப்பாவின் ஊரும்.. தன் அப்பா பேசும் மொழியும்.. தன் அப்பாவின் உறவினர்களைப் பற்றியும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். எனது கணவனின் உறவுகளை.. குறிப்பாக அந்த பாட்டியை என்னால் மறக்க 
முடியாது. அங்கே
 நான் பார்த்த கடற்கரைகளையும், கோயிலையும், என்னால் மறக்க முடியாது. தினமும் போனில் பாட்டியும் பேத்தி கீர்த்தனாவும் பேசிக் கொள்கிறார்கள்.. உண்மையான அன்புக்கும் பாசத்திற்கும் முன்னால் மொழிகள் தேவையா என்ன… இன்னும் மூன்று மாதத்தில் மீண்டும் நாங்கள் யாழ்ப்பாணம் செல்ல இருக்கிறோம். -நன்றி.
அவர் எழுதியிருக்கும் இந்த கட்டுரையைப் படித்து நான் பிரமித்துப் போனேன். ஏதோ ஒரு ஆபிரிக்க நாட்டில் பிறந்து இந்த யாழ்ப்பாண மண்ணுக்கு மருமகளாக வாழ வந்த அந்தப் பெண்ணின் கதை அற்புதமானது…. இப்படி ஏராளமான மனிதர்களின் ஏராளமான அனுபவங்கள் இணையம் முழுவதும் இறைந்து கிடக்கிறது.
நாம் வாழும் இந்த யாழ்ப்பாண மண்ணுக்கும், இங்கே வாழும் மனிதர்களுக்கும் என்று ஒரு தனிப்பட்ட கலாச்சாரமும்.. பண்பாடும் உண்டு. சைவமும் தமிழும் இங்கேதான் இன்னமும் உயிரோடு இறுக்கிறது. எத்தனை அழிவுகள் வந்தாலும்.. எத்தனை இழப்புகள் வந்தாலும்.. நாங்கள் அழிந்து போகமாட்டோம்.. எளிமையும் அன்புமாக… இதோ.. இந்த தென்னாபிரிக்கப் பெண்ணைப் போல.. உறவுகளோடு கூடி வாழ்க்கையை அனுபவித்து வாழ்வோம்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 11 அக்டோபர், 2016

சிகிசை முடிந்து கிளிநொச்சி ஜெனிக்கா மிக்க மகிழ்ச்சியில்!!

கடந்த 26-02-2016 அன்று சிகிசை முடிந்து தற்போது எனது மகள் ஜெனிக்கா வழமைக்கு திரும்பிக்கொண்டிருக்கும் சிறுமி. மிகுந்த ஆனந்தத்தில் உள்ளார்.

இவரின் மருத்துவச் செலவுக்கு சுமார் எட்டு லட்ச ரூபாய்கள் தேவைப்படுகிறது. எமது குடும்ப கூழ் நிலை கருதி பல தாராள உள்ளங்கள் உதவின அவர்களுக்கு எமது நன்றிகள்.
அத்துடன் வெகு விரைவில் சாதாரண வாழ்க்கையில் இணைந்து சாதிக்க வேண்டும் எனும் ஆதங்கத்தில் தன் மகன்ஜெனிக்கா இருப்பதாக தந்தை சுரேஸ் ஆனந் குறிப்பிட்டாா்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஞாயிறு, 9 அக்டோபர், 2016

எதிர்வரும் ஒக்டோபர் 8 முதல் 16 வரை விவசாயிகள் வாரம்?

உணவு உற்பத்தி தேசிய வேலைத் திட்டத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விவசாயிகள் வாரத்தை அனுஷ்டிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
இதன்படி நாளை முதல் எதிர்வரும் 16ம் திகதி வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக, கமத்தொழில் அமைச்சு
 கூறியுள்ளது. 
கமநல அமைச்சு, மாகாண கமநல அமைச்சுக்கள், கமநல திணைக்களம் மற்றும் விவசாய அபிவிருத்தி திணைக்களம் உள்ளிட்ட இதனுடன் தொடர்புடைய அணைத்து நிறுவனங்களின் பங்குபற்றுதலில் இந்த வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 6 அக்டோபர், 2016

செல்வி உமாசங்கர் ஜயனி 194 புள்ளிகளைப் பெற்று சாதனை!

எதிர்காலத்தில் ஜனாதிபதியாக உருவாகி நாட்டிற்குச் சேவை செய்வதே எனது இலட்சியம் என யாழ். மாவட்டத்தில் முதலாமிடம் பெற்ற சாதனை மாணவி உமாசங்கர் ஜயனி கூறினார்.
நடைபெற்று முடிந்த தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலையை சேர்ந்த செல்வி உமாசங்கர் ஜயனி 194 புள்ளிகளைப் பெற்று வடமாகாணத்தில் இரண்டாமிடத்தை பெற்றுள்ளார்.
தனது பெறுபேறு தொடர்பில் கருத்து வழங்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் புதிய அரசியல் யாப்பு உருவாகப்போகும் தருவாயில் இனச்சார்பற்ற மதச்சார்பற்ற புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படுமானால் மாணவியின் இந்த கனவு நிறைவேறக்கூடிய சாத்தியம் உள்ளது உண்மையே. சாதனை மாணவி ஜயனியைச் சந்தித்த போது அவர் கருத்துத்
 தெரிவிக்கையில்,

நான் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ். மாவட்டத்தில் முதலாமிடத்தையும், வடமாகாணத்தில் இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளேன்.
இதனை முன்னிட்டு நான் மிகவும் பெருமையடைகிறேன். எனக்குக் கல்வி கற்பித்த வகுப்பாசிரியர் திரு .க. செல்வவேல் ஆசிரியர் அவர்களுக்கும், முதலாம் தரத்தில் கல்வி கற்பித்த திருமதி. ரவிச்சந்திரன் ஆசிரியர் அவர்களுக்கும், என்னை மூன்றாம் தரம் மற்றும் நான்காம் தரத்தில் பெரிதும் ஊக்குவித்த திருமதி- சுபாஷினி ஆசிரியர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
அதுமட்டுமன்றி என்னைக் கல்வியில் ஊக்குவித்த தந்தை, தாயார் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றிகள். மற்றும் எனது சகோதரருக்கும் நன்றிகள். எனது வெற்றிக்குக் காரணமாக அமைந்த பாடசாலைச் சமூகத்திற்கும், அனைவருக்கும் நன்றிகள். எனது எதிர்கால இலட்சியம் இந்த நாட்டின் ஜனாதிபதியாக உருவாகி மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்பதே எனவும் 
தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 3 அக்டோபர், 2016

நீரில் மூழ்கி இலங்கையர் இருவர் துபாயில் பலி!

துபாயில் கடலில் நீராட சென்ற இலங்கையர்கள் இருவரும் இந்தியர் ஒருவரும் பலியாகியுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை
 இடம்பெற்றுள்ளது.
எனினும் சார்ஜா கடலில் மூழ்கிய மற்றும் ஒரு எகிப்திய பொதுமகன் நண்பர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
கடல் கொந்தளிப்பு அதிகமானதன் காரணமாகவே இந்த உயிரிழப்பு சம்வங்கள் இடம்பெற்றுள்ளன,
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 27 செப்டம்பர், 2016

எவறஸ்ட் வி.க பொன்விழாகின்ண இறுதிப்போட்டிக்குள் ஞானமுருகன் !.

யாழ்  எவறஸ்ட் வி.க பொன்விழா நிறைவினை முன்னிட்டு நடாத்திவரும்  (2016))வடமாகாணரிதியிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின்
1வது அரையிருதி ஆட்டத்தில் கிளி உருத்திரபுரம் மயிலாங்காடு ஞானமுருகன் மோதியது இப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது இறுதியில் 1-1 என்ற ரிதியில் சமனிலையில் வெற்றி திர்மானிப்பதற்காக பனால்டி உதை வழங்கப்பட்டது இதில் 4-3 என்ற ரிதியில் ஞானமுருகன் வெற்றி பெற்று இறுதிக்குள் நுழைந்தது.
இறுதிக்குள் நுழைந்ததுவெற்றி பெற்ற ஞானமுருகன் விளை யாட்டுக்கழகத்திற்கு எமது 
இணையங்கள் சார்பான  
வாழ்த்துக்களைத்தெரிவிக்கின்றன 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




திங்கள், 26 செப்டம்பர், 2016

எவறஸ்ட் வி.க பொன்விழாகின்ன அரையிருதி குருநகர்பாடுமீன் ஆட்டத்தில் !

யாழ் எவறஸ்ட் வி.க பொன்விழாவினை முன்னிட்டு.நடாத்தி வந்த  இறுதி ஆட்டம் ..2வது அரையிருதி இன்று  (26.09.2016-திங்கள்) 
                மன்னார்கில்லறி எதிர் குருநகர்பாடுமீன் பொன்விழாகின்ன அரையிருதி ஆட்டத்தில் மோதவுள்ளது இப்போட்டி இரவு 08.00மணியளவில் 
ஆரம்பமாகும்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




Blogger இயக்குவது.