சனி, 30 ஜூலை, 2016

காட்டு யானைகளின் அட்டகாசம்மட்டக்களப்பில்!…

மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்த வண்ணமே உள்ளது.
போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவின் திக்கோடை கிராமத்தினுள் இன்று அதிகாலை புகுந்த காட்டு யானைகள் வீடுகள் இரண்டை சேதப்படுத்தியதுடன் உடமைகளுக்கும் சேதம் விளைவித்துள்ளது.
பயன்தரு தென்னை மரங்களையும் காட்டு யானைகள் 
அழித்துள்ளன.
இக்கிராம மக்கள் தொடர்ச்சியாக காட்டு யானைகளின் தொல்லைகளுக்கு முகம் கொடுப்பதுடன் யானைகளின் தாக்குதலால் மூவர் கொல்லப்பட்டும் உள்ளனர்.
கடந்த காலங்களில் யானைகளின் தாக்குதலால் இக்கிராமத்தில் நூற்றுக்கணக்கான பயன்தரு மரங்கள் அழிக்கப்பட்டமை
 குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 25 ஜூலை, 2016

எம் தமிழை வளர்த்த பனையை வளர்ப்பது தமிழர் கடமை”

“தமிழை வளர்த்த பனையை வளர்ப்பது தமிழர் கடமை” — பனை அபிவிருத்தி வாரத் தொடக்க விழாவில் அமைச்சர் பொ. 
ஐங்கரநேசன்.
தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியம் ஓலைச் சுவடிகளிலேயே எழுதப்பட்டது.  சங்க இலக்கியங்கள், பதினெண்கீழ் கணக்கு நூல்கள், தேவாரத் திருமுறைகள், சித்த மருத்துவ நூல்கள் என்று தமிழை வளப்படுத்திய அத்தனை நூல்களும் ஓலைச் சுவடிகள் வழியாகவே எங்களிடம் கையளிக்கப்பட்டன.  தமிழை வளர்த்தது பனை.  பனை இல்லாமல் இருந்திருந்தால் தமிழுக்கு இவ்வளவு வளங்களும் வந்து சேர்ந்திராது.  தமிழை வளர்த்த பனையை வளர்ப்பது எமது கடமை என்று வடக்கு கூட்டுறவு அமைச்சர் பொ. ஐங்கரநேசன் 
தெரிவித்துள்ளார்.
வடமாகாண பனை அபிவிருத்தி வாரத் தொடக்க நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை யாழ் பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.  வடக்கு முதலமைச்சர் க. வி. விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்துப் பேசியபோதே அமைச்சர் பொ. ஐங்கரநேசன் இவ்வாறு 
தெரிவித்துள்ளார்.
அங்கு, அவர் தொடர்ந்து உரையாற்றிய போது, பனையே எல்லாமுமான வாழ்வு தமிழருக்கு இருந்தது.  பனையின் முடி முதல் அடி வரை எங்களுக்குப் பயன் தந்தது.  வருடம்பூராவும் பயன் தந்தது.  மணற்காடாக இருந்த யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் குடியேறக் காரணமாக இருந்தது இந்தப் பனை வளம்தான்.  ஆனால், துரதிர்ஷ்டவசமாக பனைத் தொழில் செய்வோரை குறிப்பிட்ட ஒரு சமூகமாக நாம் ஒதுக்கியதுபோல பனை மரத்தையும் ஒதுக்கிவிட்டோம்.
ஒரு காலத்தில் பருவத்துக்குப் பருவம் பசளைகளாகப் பயன்படுத்துவதற்காக ஓலைகள் வெட்டப்பட்டு தலைமுடி வெட்டப்பட்டது போல கம்பீரமாகக் காட்சியளித்த பனை மரங்கள் இன்று தீண்டுவாரற்று காவோலைகளுடன் தலைவிரி கோலமாகக் காணப்படுகின்றன.  இந்நிலை
 மாறவேண்டும். 
 வடக்கின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் தூண்களில் ஒன்றாக மீண்டும் பனை மரங்கள் நிமிரவேண்டும்.  இதற்கு, பனை உற்பத்திகளைப் பயன்படுத்தவும் நவீன காலத்துக்கு ஏற்பப் பனைசார் உற்பத்திகளை நுகர்வோரைக் கவரும் வகையில் அபிவிருத்தி செய்யவும் சகல தரப்பினரும் முன்வர வேண்டும் என்றும் 
தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வடமாகாண கல்வி அமைச்சர் த. குருகுலராஜா, வடமாகாணசபை உறுப்பினர்கள் அனந்தி சசிதரன், வே. சிவயோகன்,க. தர்மலிங்கம், கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் மதுமதி வசந்தகுமார், விவசாய அமைச்சின் உதவிச் செயலாளர் லாகினி
 நிரூபராஜ், மக்கள்
 வங்கியின் பிராந்திய முகாமையாளர் க.  சுசிந்திரன் ஆகியோருடன் பல்வேறு திணைக்களங்களைச் சார்ந்த அதிகாரிகளும், பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தார்கள்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 8 ஜூலை, 2016

வேல்சாமி 52தினங்கள் நடந்து கதிர்காமத்தில் கால் பதித்தார் !

எந்த தொல்லையும் இல்லை என்கிறார் அவர்!வெறும் நீர்த்தாங்கிகளும் இருந்தன!
கடந்த மே மாதம் 15ஆம் திகதி யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பமான இலங்கையின் மிகநீண்ட கதிர்காமபாதயாத்திரைக்குழு நேற்று 52தின நடையின் பின்னர் கதிர்காமத்தில் கால் பதித்தது.
நேற்று அங்கு சென்ற வேல்சாமி தலைமையிலான குழுவினரை கதிர்காமம் தெய்வானை அம்மனாலய பொறுப்பாளர் அருள் வரவேற்று தேனீர் விருந்துபசாரம் வழங்கினார்.
வேல்சாமி அங்கிருந்து தகவல் தருகையில்:
கடந்த 52தினங்களாக நாட்டிலும் காட்டிலுமாக முருகனருளால் எவ்விதமான பிரச்சினைகளுமின்றி நடந்துவந்து சேர்ந்தோம்.என்னுடன் 123பேர் வந்தார்கள். உகந்தைமலை முருகனாலயத்திலிருந்து முதல்நாள் சுமார் 1000பேரளிவில் காட்டிற்குள் பிரவேசித்தோம்.
வழிநெடுகிலும் தண்ணீர்த்தாங்கிள் இருக்குமென வழியனுப்பிய மொனராகலை மாவட்ட அரசாங்க அதிபர் தீபா பத்மகுலசூரிய சொன்னார்.
சில இடங்களில் தண்ணீர்த்தாங்கிள் நீரில்லாமலிருந்தன. எனினும் நாம் கஸ்டப்படவில்லை..
குமுக்களன் ஆற்றில் நிறையதண்ணீர் சென்றது சிக்கலாகவிருந்தது. பெண்கள் மிகவும் சிரமப்பட்டார்கள். தண்ணீரைத் திறந்துவிட்டிருக்கலாம்.
உபப்hற்றிலும் நீர் அதிகம்.
எனினும் பயணம் சுகமாகவிருந்தது. நாவலடியில் மருத்துவமுகாம் இடம்பெற்றது. சிங்கள் ஊடகவியலாளர்கள் என்னிடம் பேட்டி எடுத்தார்கள்.
இன்று கொடியேற்றத்துடன் நாம் வீடு செல்லவிருக்கின்றோம்
. என்றார்.
வேல்சாமி தலைமையிலான இக்குழுவினர் 7வது தடவையாக யாழ்ப்பாணத்திலிருந்து இவ்யாத்திரையை மேற்கொண்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.
இம்முறை இவரது அணியில் 123அடியார்கள் பங்கேற்றனர்.அவர்களில் 50வீதமானோர் வடபகுதியைச்சேர்ந்தவர்கள்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



புதன், 6 ஜூலை, 2016

வரி நாய்களுக்கான அறவிடுதலை அறிமுகப்படுத்தியது யார்? வலுத்தது சர்ச்சை

வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கான வரி அறவிடுதலை அறிமுகப்படுத்தியது முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஸவே என பிரதி ஊடகத்துறை அமைச்சர் கரு பரண விதாரன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு
 கூறினார்.
அரசாங்கம் நாய்களுக்கு கூட வரி விதிக்கின்றது என பஸில் ராஜபக்ஸ நேற்று ஊடகங்களிடம் குற்றம் சுமத்தியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் போதே பிரதி ஊடக அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
மேலும், பஸில் ராஜபக்ஸ நாய்களின் கூண்டைப் பராமரிப்பதற்கு ஐந்து கடற்படையினரை முழுநேரப் பணியில் ஈடுபடுத்தியிருந்தார் எனவும், நாய்களுக்கான வரி அறவிடுதல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான முழுக் காரணமும் பஸில் ராஜபக்ஸவே என கரு பரணவிதாரன 
தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

Blogger இயக்குவது.