திங்கள், 29 ஆகஸ்ட், 2016

விபத்தில் கோப்பாய் பகுதியில் வைத்தியர் உயிரிழப்பு!


  யாழ்  கோப்பாய் பகுதியில் இன்று திங்கட்கிழமை இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற இ.போ.ச.பஸ்ஸும் வைத்தியர் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பஸ்ஸுடன் மோதிய மோட்டார் சைக்கிள் தூக்கி வீசப்பட்டதாகவும் அந்த இடத்திலேயே வைத்தியர் உயிரிழந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. யாழ். போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் செந்வரன் (வயது 35) என்ற வைத்தியரே உயிரிழந்தவராவார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

தாமரைப்பூ வியாபாரம் யாழில் அமோகம்!

நல்லூர் திருவிழா, மற்றும் நாக விகாரை ஆகிய தலங்களுக்குச் செல்லும் மக்கள் தாமரை பூக்களை விரும்பி வாங்குவதால் யாழ்நகரை  அண்மித்த பகுதியான பண்ணை கடற்கரைப் பகுதியில் தாமரைப்பூ வியாபாரம்  பிடித்துள்ளது.   
இப்பகுதியில்  வவுனியா மற்றும் அனுராதபுர பகுதியில் இருந்து வரும்  வியாபாரிளே  இவ்வாறு  வியாபாரத்தை  ஆரம்பித்து  உள்ளனர் . ஒரு பூவில் விலை 10 ரூபா முதல் விற்பனை 
செய்யப்படுகிறது. 
இப்பிரதேசத்தில் தமது ஓய்வு நேரங்களை கழிப்பதற்காக வரும் மக்கள் மற்றும் வெளிமாவட்ட  உல்லாசப் பயணிகள்   வந்து  இறங்கும் முதல் இடமாக இருக்கின்றமையாலும் இப்  பகுதியில் தாமரை பூ வியாபாரம் சூடு பிடித்துள்ளதாக வியாபாரிகள் 
தெரிவிக்கினறனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

மறந்திடுமோ மனதை விட்டு' கவிதை நூல் வெளியீட்டு விழா 13.08.2016

யாழ் வல்வெட்டித்துறையில் 13.08.2016, இடம்பெற்ற 'மறந்திடுமோ மனதை விட்டு' கவிதை நூல் வெளியீட்டு விழா
ஈழத்தில் வாழும் கவிஞர் கம்பிகளின் மொழி பிறேம் எழுதிய 'மறந்திடுமோ மனதை விட்டு' கவிதை நூலின் வெளியீட்டு விழாவானது 13.08.2016, சனிக்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு, யாழ்ப்பாணம் 
வல்வெட்டித்துறை அமரிக்கன் மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலையில் இடம்பெற்றது.
நிகழ்வுக்கு முத்துஐயன்கட்டு வலதுகரை மகா வித்தியாலய அதிபர் கம்பீரக் குரலோன் சி.நாகேந்திரராஜா தலைமை வகித்தார்.
வரவேற்பு நடனத்தினை சிதம்பரேஸ்வரா நடனாலயப் பள்ளி இயக்குநர் செந்தூர்ச்செல்வன் வழங்கினார். தமிழ் மொழி வாழ்த்தினை மாணவிகள் கிசானி, லோஜினி, ரிதர்சனா ஆகியோர் இசைத்தனர். வாழ்த்துக் கவியினை கவிஞர் குடத்தனையூரான் சிவா வழங்கினார்.
ஆசியுரையினை படைப்பாளர் சமரபாகு சீனா உதயகுமார் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து நூலினை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்கள் வெளியிட்டு வைக்க முதற்பிரதியினை சிறீதரன் ஜெயமாலா அவர்கள் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து பிரதிகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து நூல் மற்றும் நூலாசிரியர் அறிமுக உரையினை செல்லமுத்து வெளியீட்டகம் இயக்குநர் யோ.புரட்சி நிகழ்த்தினார். இந்த வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளை காவ்ய பிரதீபா வன்னியூர் செந்தூரன் தொகுத்து வழங்கினார்.
நூலின் ஆய்வுரையினை கவிஞர் பொலிகையூர் சிந்துதாசன்
 நிகழ்த்தினார். 
பிரதம விருந்தினர் உரையினை நிகழ்வின் பிரதம விருந்தினர் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நிகழ்த்தினார். சிறப்புரையினை வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆற்றினார். வாழ்த்துரையினை வடமாகாண சபை உறுப்பினர் சிவயோகநாதன் நிகழ்த்தினார்.
ஒளிஅரசி சஞ்சிகை ஊடக அனுசரனையுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஏற்புரையினை நூலாசிரியர் கம்பிகளின் மொழி பிறேம் வழங்கினார். இந்த நூலினை விஜய் அச்சுப் பதிப்பகம் அச்சேற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கவிஞர் கம்பிகளின் மொழி பிறேம் அவர்கள் கடந்த வருடம் காய்ந்து போகாத இரத்தக் கறைகள் எனும் குறுநாவலை வெளியீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





வியாழன், 11 ஆகஸ்ட், 2016

பிளாஸ்டிக் தட்டுகளில் நல்லூர் ஆலயத்தில் அர்ச்சன!

யாழ் நல்லூர் கந்தனின் மகோற்சவம் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஆலயச் சுழலில் பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக்கிலாலான  அர்ச்சனை தட்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதை அவதானிக்ககூடியதாக இருக்கின்றது.
நல்லூர் மகோற்சவம் அரம்பிப்பதற்கு முன்னரே யாழ் மாநகரசபை ஆணையாளர்  பிளாஸ்டிக் அர்ச்சனை தட்டுகளை விற்பனை செய்ய வேண்டாம் எனவும் அதற்குப் பதிலாக பனை ஓலையால் பின்னப்பட்ட அர்ச்சனை தட்டுகளை பாவிக்குமாறு கேட்டுகொள்ளபட்டமை குறிப்பிடத்தக்கது. 
பனை அபிவிருத்தி சபையிடம் குறைந்த விலையில் பனை ஓலையால் தயாரிக்கப்பட்ட  அர்ச்சனை தட்டுகளை குறைந்த விலையில் பெற்று கொடுப்பதுக்கு வேண்டிய ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் யாழ் மாநகரசபை ஆணையாளர் தெரிவித்தார்.
ஆயினும் வர்த்தகர்கள் தமிழ் கலாச்சாரத்திற்கு வழமைக்கு மாறான முறையில்  பனை ஓலையால் தயாரிக்கப்பட்ட  அர்ச்சனை தட்டுக்களை தவிர்த்து  பிளாஸ்டிக்கிலாலான அர்ச்சனைத் தட்டுக்களை விற்பனை செய்கின்றனர். 
பிளாஸ்ரிக் அர்ச்சனைத் தட்டுக்கள் மலிவு விலைகளில்  கிடைப்பதால் கடைக்காரர்கள் அதனை விற்பனை செய்வதாகவும் பலர் தெரிவிக்கின்றனர். 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




புதன், 3 ஆகஸ்ட், 2016

முச்சக்கரவண்டி 30 அடிபள்ளத்தில் பாய்ந்து விபத்து!

தலவாக்கலை நாவலப்பிட்டிய பிரதான வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று சுமார் 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து நாவலப்பிட்டிய கல்லோயா பகுதியில் இன்று நடந்துள்ளது.
இதில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் நாவலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தலவாக்கலை பகுதியிலிருந்து நாவலப்பிட்டிய நகருக்கு சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றே இவ்வாறு வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
முச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனம் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த நாவலப்பிட்டிய பொலிஸார் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
 வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

Blogger இயக்குவது.