செவ்வாய், 27 செப்டம்பர், 2016

எவறஸ்ட் வி.க பொன்விழாகின்ண இறுதிப்போட்டிக்குள் ஞானமுருகன் !.

யாழ்  எவறஸ்ட் வி.க பொன்விழா நிறைவினை முன்னிட்டு நடாத்திவரும்  (2016))வடமாகாணரிதியிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின்
1வது அரையிருதி ஆட்டத்தில் கிளி உருத்திரபுரம் மயிலாங்காடு ஞானமுருகன் மோதியது இப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது இறுதியில் 1-1 என்ற ரிதியில் சமனிலையில் வெற்றி திர்மானிப்பதற்காக பனால்டி உதை வழங்கப்பட்டது இதில் 4-3 என்ற ரிதியில் ஞானமுருகன் வெற்றி பெற்று இறுதிக்குள் நுழைந்தது.
இறுதிக்குள் நுழைந்ததுவெற்றி பெற்ற ஞானமுருகன் விளை யாட்டுக்கழகத்திற்கு எமது 
இணையங்கள் சார்பான  
வாழ்த்துக்களைத்தெரிவிக்கின்றன 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




திங்கள், 26 செப்டம்பர், 2016

எவறஸ்ட் வி.க பொன்விழாகின்ன அரையிருதி குருநகர்பாடுமீன் ஆட்டத்தில் !

யாழ் எவறஸ்ட் வி.க பொன்விழாவினை முன்னிட்டு.நடாத்தி வந்த  இறுதி ஆட்டம் ..2வது அரையிருதி இன்று  (26.09.2016-திங்கள்) 
                மன்னார்கில்லறி எதிர் குருநகர்பாடுமீன் பொன்விழாகின்ன அரையிருதி ஆட்டத்தில் மோதவுள்ளது இப்போட்டி இரவு 08.00மணியளவில் 
ஆரம்பமாகும்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

வரலாற்றில் சிகரெட் ஒன்றில் அதிகப்படியான விலை!

ஐந்து ரூபாவால் விலையை அதிகரித்து அதற்கு நூற்றுக்கு 15 சதவீத வற் வரியினை சுமத்துவதன் ஊடாக சிகரெட்டின் விலை 50 ரூபாய் வரை அதிகரிக்கக் கூடும் என மது மற்றும் போதை மருந்து தகவல் மையம் தெரிவித்துள்ளது.
இது வரலாற்றில் சிகரெட் ஒன்றில் அதிகப்படியான விலை அதிகரிப்பு என அதன் பணிப்பாளர் சம்பத் த சேரம் தெரிவித்தார்.
சிகரெட்டின் விலையை 5 ரூபாவால் அதிகரித்து அதற்கு 15 வீத வற் வரியினை சுமத்துவது தொடர்பான யோசனை எதிர்வரும்
 இரு வாரங்களில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
கடந்த தினத்தில் இடம்பெற்ற பேராசிரியர் சேனக பிபிலேவின் நினைவு நாள் நிகழ்வில் கலந்து கொண்டபோது அமைச்சர் இதனை 
தெரிவித்திருந்தார்...
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 6


சனி, 24 செப்டம்பர், 2016

எவறஸ்ட் வி.க பொன்விழாவினை முன்னிட்டு.நடாத்தி வந்த கிரிக்கற் இறுதி ஆட்டம்!

பொன்விழாகிண்ணம்(கிரிக்கற்) ஞானம்ஸ் வசம் 
யாழ் எவறஸ்ட் வி.க பொன்விழாவினை முன்னிட்டு.நடாத்தி வந்த கிரிக்கற் சுற்றுப்போட்டியின் இறுதி ஆட்டம் இன்று(24.09.2016-சனி) மின்னொளியில் நடைபெற்றது இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஞானம்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 06ஓவர்களில் 02விக்கட் இழப்பிற்கு
 61 ஓட்டங்களை பெற்றனர் இதில் அதிகபட்சமாக பிரகாஷ் 24 ஓட்டங்களை பெற்றார் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வதிரிசிறிமுருகன் 06ஓவரில் 05 விக்கட் இழப்பிற்கு 48 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர் அணி 
$சார்பாக டெஷ்மன்-25 ஓட்டங்கள்ஆகவே 13ஓட்டங்களால் ஞானம்ஸ் வெற்றிபெற்றுள்ளது
தொடர்ஆட்டநாயகன்-டெஷ்மன்(சிறிமுருகன்)
ஆட்டநாயகன்-பிரகாஷ்(ஞானம்ஸ்)
பந்துவிச்சாளர்-சுவேந்திரன்(ஞானம்ஸ்)
இவர்களுக்கான பரிசில்கள்27.09.2016(செவ்வாய்) இரவு10.00மணியளவில் கழக மைதானத்தில் வைத்துவழங்கப்படும் எனவே இரு கழக வீர்ர்களையும் தவறாது சமூகம் தருமாறு 
கேட்டுகொள்கின்றோம்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>










ஆவரங்கால் மத்தியவிளையாட்டுக்கழகம்நடாத்தும் கிரிக்கற் இறுதிப்போட்டி!



கிரிக்கற் இறுதிப்போட்டி இன்று (24.09.2016)சனி மின்னொளியில்
எவறஸ்ட் வி.க நடாத்திவந்த வடமாகாணரிதியிலான கிரிக்கற் சுற்றுப்போட்டியின் அரையிருதி மற்றும் இறுதிப்போட்டி நாளை கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது
24.09.2016-03.30-
சங்கானைஉதயதாரகை எதிர் வதிரிசிறிமுருகன்
24.09.2016-04.00
கரவெட்டிஞானம்ஸ் எதிர் குரும்பசிட்டிஉதயசூரியன்
இறுதிப்போட்டிகள் இதே தினத்தில் மின்னொளியில் 07.00 மணிக்கு இடம்பெறும்.
24.09.2016-03.30-
சங்கானைஉதயதாரகை எதிர் வதிரிசிறிமுருகன்
24.09.2016-04.00
கரவெட்டிஞானம்ஸ் எதிர் குரும்பசிட்டிஉதயசூரியன்
இறுதிப்போட்டிகள் இதே தினத்தில் மின்னொளியில் 07.00 மணிக்கு இடம்பெறும்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 23 செப்டம்பர், 2016

ஆறு வயது சிறுமி தந்தையின் மனைவியால் சித்திரவதைக்குஉள்ளனர் ?


நீர்வேலி பகுதியில் 6 வயது சிறுமியை அடித்து துன்புறுத்திய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் அச் சிறுமியின் சித்தி என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அப் பெண் சிறுமிக்கு செய்த கொடூர சித்திரவதையானது நேற்று காலை முதல் இணையத்தளங்களில் வெளியாகிய நிலையில் பலரும் அதற்கு தமது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சிறுவர் நன்னடத்தை பிரிவு, குறித்த பெண்ணுக்கு எதிராக காவல் துறையில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தமைக்கு அமையவே அவர் கைது செய்யப்பட்டதாகவும்
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல் துறை மேற்கொண்டு வரும் நிலையில் , பெண்ணுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




புதன், 21 செப்டம்பர், 2016

நிரோஜனின்“கூட்டாளி” திரைப்படம் எம்மவர்பாரவைக்கு!

கூட்டாளி” திரைப்படம் நோர்வேயில் முதல் தடவையாக திரையிடப்படுகிறது. எதிர்வரும் ஞாயிறு 25.09.16 மாலை 16.00 மணி ரோமமென் சேனாவில் ( Rommen Scene ) வில் திரையிடப்படுகிறது. தொடர்ந்து தமிழர்கள் வாழ்கின்ற 18 நாடுகளில் திரையிடப்படும்.
ஈழத்தமிழர்களின் நீண்ட காலக் கனவைச் சுமக்கும் ஒரு திரைக்காவியம் “கூட்டாளி” இயக்குனர், நடிகர் அமரர் மணிவண்ணன் அய்யா, இயக்குனர் சீனுராமசாமி ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சி.நிரோஜன் இயக்கி நடித்திருக்கிறார்.
தமிழீழம் மலர்ந்திருந்தால் ஈழத்தமிழர்களின் வாழக்கை எப்படி அமைந்திருக்கும் என்ற கருவை முன்வைத்து உருவான சிறந்த திரைப்படம்.
தமிழீழத்தில் நடந்த இறுதி போரின் கொடுமைகளையும் எடுத்துச் சொல்கிறது இத்திரைப்படம்.
இயக்குனர் நிரோஜனின் கடிதத்தைப் படியுங்கள், வந்து திரையரங்கை நிறையுங்கள்.
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு”
என் தாய்த்தமிழ் உறவுகளே.!
ஈழத்தமிழனாகிய நான் “கூட்டாளி” என்னும் ஈழத்திரைப்படத்தை இயக்கி உங்கள் முன் சமர்ப்பிப்பதில் பெருமை அடைகிறேன். எனக்கு ஆதரவளித்ததர்க்காக உங்கள் அனைவரையும் இக்கடிதம் மூலமாக தனித்தனியே வணங்கி வரவேற்கிறேன். தமிழகத்தில்
 ஒரு நேர்த்தியான
, சரியான ஈழத்திரைப்படத்தை இயக்குவதில் நான் அடைந்த தடைகளை விட, தற்போது இதை உங்கள் முன் கொண்டுவருவதற்கு பல இன்னல்களையும், பிரச்சனைகளையும் எதிர்நோக்கி நிற்கிறேன். இத்திரைப்படத்திற்கு இந்தியாவில் ஏன் தணிக்கை இல்லை மற்றும் 
திரையிட முடியாது.
 எப்படியாவது இப்படத்தை ஒவ்வொரு உணர்வுள்ள, மானமுள்ள தமிழரிடமும், மனிதநேயமுள்ள அனைத்து மனிதர்களிடமும் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பதே இப்போது எமது போராட்டம். அந்த போராட்டத்தில் என்னை உங்களோடு முழுமையாக இணைத்துக் 
கொள்கின்றேன்.
எம் மக்கள் அனைவரும் இத்திரைப்படத்தைக் காண வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இப்போது இங்கு படத்தை நோர்வேயில் வெளியீடு செய்யும் என் அண்ணன்மார்களிடம் மறு திகதி வாங்கி இதே திரையில் உங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் குறிப்பாக மாற்று மொழி நண்பர்களையும் அழைத்து வந்து இத்திரைப்படத்தை அவர்களுக்கு காண்பிப்பீர்களேயானால் அதுவே 
எமது வெற்றி.
பல இயக்குநர்களையும், கதாநாயகர்களையும் உச்ச நட்சத்திரங்களாக கொண்டு போய் நிறுத்தியவர்கள் ஈழத்தமிழர்கள் என்பது மறுக்க முடியாத, மறைக்க முடியாத உண்மை. ஒரு சிலர் என்னை அகதி என்பார்கள் அவர்களுக்குத் தெரியாது அகதியாக அலையும் தமிழர் 

தான் இந்த அகிலத்தை ஒரு நாள் ஆளப்போகிறார்கள் என்பது. ஈழத்தில் பிறந்த எனது ரத்த சொந்தங்கள் பல தளங்களில், பல நாடுகளில், பல துறைகளில் பல சாதனைகளை எந்த தலைக்கணமும் இல்லாமல் வெற்றி நடை போடுவதை நான் ஊடகங்கள் நண்பர்கள் வழி கேட்கும்போது அதை எனது தனிப்பட்ட வெற்றியாகவே எண்ணி 
மகிழ்ச்சியடைவேன்.
உறவுகளே, ஊடக நண்பர்களே இத்திரைப்படத்தை வெவ்வேறு நாடுகளில் வாழும் எமது உறவுகளிடம் நீங்கள் தொலைபேசியில் பேசும்போது ஒரு நிமிடம் இதைப்பற்றி அவர்களுக்கு எடுத்து சொல்லி அவர்களையும் படம் பார்க்க வைக்கும் வகையில் எமக்கு உதவி செய்யுமாறு
 மிகத்தாழ்மையுடன்
 எமது படக்குழு உங்களிடம் வேண்டி நிற்கிறது. இப்படத்தில் வரும் பாதித் தொகையை போரால் பாதிக்கப்பட்ட எம்மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது தான் எனதும், எனது தயாரிப்பாளரின் விருப்பமும் என்பதை இங்கே தெரிவித்து கொள்கிறேன்.
திரைப்படத்துறையிலும் இன்னும் பல துறைகளிலும் எனது உறவுகளை வளர்த்துவிடுவதற்கு இந்தப்படத்தின் மூலமாக கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
 தங்களது கருத்துக்களையும்
, ஆலோசனைகளையும் என்னுடன் பகிர்ந்து கொண்டு என்னையும் என் போன்ற கலைஞர்களையும் வளர்த்து விடுவீர்கள் என்ற திடமான நம்பிக்கை எமக்கு உண்டு. இத்திரைப்படத்தை உங்கள் கண்முன்னே வெற்றிகரமாக கொண்டு வந்து சேர்ப்பதற்கு அனைத்து வழிகளிலும் உதவிய எமது உறவுகளின் கைகளை இறுக்க 
பற்றிக்கொள்கிறோம்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 13 செப்டம்பர், 2016

ஈழத்பிதாய் தந்த .எச்.அப்துல ஹமீத் அவர்கள் கெளரவிக்கப்பட்டார்.

கனடா தமிழ் Chamber of Commerce 25ம் ஆண்டு விழாவிற்கு வருகை தந்த திரு.பி.எச். அப்துல்ஹமீத் அவர்களை சந்தித்து உரையாடியது மிக்க மகிழ்ச்சி.அந்த மேடையில் அரை நூற்றாண்டுகள்
 ஒலிபரப்பு சேவையில் என்று திரு .பி.எச்.அப்துல ஹமீத் அவர்கள் கெளரவிக்கப்பட்டார்.முற்றத்து மல்லிகை காற்றலையில் உலகெல்லாம் தமிழ்மணம் பரவ இன்னும் பல நூற்றாண்டுகள் ஒலி பரப்பு துறையில் தமிழ்பணி தொடர எம் இந்த இணையங்களின்  இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!...
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 9 செப்டம்பர், 2016

மகளீர் கல்லுாரி மாணவிகள் மீது வன்முறை கலவரம்!!!

யாழ் உடுவில் மகளீர்கல்லுாரியில் சற்று முன்வரை பெரும் பதற்ற நிலை தொடர்ந்து கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை தென்னிந்திய திருச்சபை ஆயர் நியமித்த அதிபர் மற்றும் பாடசாலையில் கற்பிக்கும் ஒருபகுதி
 ஆசிரியர்கள் பாடசாலை வளாகத்திற்குள் நுழைய முற்பட்ட போது அதனை அப்பாடசாலையில் கற்கும் மாணவிகள் தடுத்து நிறுத்த முற்பட்டனர். அதன் போது மாணவிகளை புதிதாக நியமிக்கப்பட்ட அதிபருக்கு சார்பானவர்கள் அடித்ததாகவும் துாசண வார்த்தைகளால் திட்டியதாகவும், ‘எங்களை கட்டிப்பிடிக்கவோ நிற்கின்றீர்கள்‘ என கேவலமாக ஏசியதாகவும்  மாணவிகள் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சற்று முன்வரை  பாடசாலை வளாகத்திற்கு மாணவிகள் மற்றும் பெற்றோர் பழைய அதிபரான சிராணிமீல்ஸ்சிற்கு ஆதரவாக களத்தில் நிற்கின்றனர். அங்கு பொலிஸ் உயரதிகாரி மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், மாகாணசபை உறுப்பினர்கள் கஜதீபன், சர்வேஸ்வரன் கல்வி அமைச்சர் குருகுலராஜா ஆகியோர் சிரானிமீல்ஸ்சுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
பெற்றோர்கள் தற்போது எடுத்த முடிவின் படி தொடர்ந்து சிராணி அம்மையாரே அதிபராக இருக்க வேண்டும் எனவும் அல்லாதுவிடின் தாம் தமது மாணவிகளை வேறு பாடசாலைகளுக்கு சேர்க்கப் போவதாகவும் கூறிக் கொண்டு நிற்கின்றனர்.
இதே வேளை மாணவிகளைத் தாக்கியதாகக் கூறப்படும் தென்னிந்திய திருச்சபையால் நியமிக்கப்பட்டா அதிபரும் அவரது ஆசிரியர்களும் பாடசாலையில் அடிப்பகுதிக்குள் சற்று முன்வரை மறைந்திருக்கின்றர். இதே வேளை சற்று முன் சுமந்திரனின் வலதுகரமாகத் தொழிற்படும் மாகாணசபை உறுப்பினர் சயந்தன் பாடசாலையில் மறைந்திருக்கும் புதிய அதிபர் குழுவைச் சந்திப்பதற்காக சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் 
தெரிவிக்கின்றன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 6 செப்டம்பர், 2016

அதிசயிக்கும் வேலைகளில் ஈடுபடும் இரு கைகள்இல்லாத தமிழ் குடும்பஸ்தர்

சாதாரண மனிதர்களை விடவும் உடற் குறைபாடுகளை உடையவர்கள் அதிசயிக்கும் வகையில் திறமைசாலிகளாக இருப்பதை நாம் அறிவோம்.அது அவர்களின் குறைகளை மறைப்பதற்காக இறைவன் அவர்களுக்குக் கொடுத்த பிரத்தியேக அருளாகும்.
உடலில் சிறிது குறைபாடு ஏற்பட்டுள்ள எத்தனையோ பேர் அதைக் காரணமாக் கொண்டு பிச்சையெடுத்து சோம்பறித்தனமாக வாழ்வதை நாம் 
காண்கிறோம்.
ஆனால்,சிலர் அந்தக் குறைபாடுகளை வெற்றிகொண்டு தன் மானத்தோடு உழைத்து வாழ்கின்றனர்.தமக்கு குறைகள் இருப்பதையே அவர்கள் மறந்துவிடுகின்றனர்.சாதாரண மனிதர்களை விடவும் அசாதாரண திறமை படைத்தவர்களாக அவர்கள்
 காணப்படுகின்றனர்.
அவ்வாறான ஒரு மனிதரை நாம் மட்டக்களப்பு மாவட்டம் புன்னைக்குடா கடற்கரையில் சந்தித்தோம்.அவர் இரண்டு கைகளையும் இழந்த 38 வயது நிரம்பிய மீனவர்.சாதாரண மனிதரை விடவும் மிகவும் திறமைசாலியான இவரைப் பற்றிக் கேள்விப்பட்டதும் அங்கு சென்று அவரைச் சந்தித்து உரையாடினோம்.
அவர் வழங்கிய சுவாரசியமான-அதிசயமிக்க தகவல்களை நாம் எமது வாசகர்களுக்கு வழங்குகின்றோம்.
கேள்வி; உங்களைப் பற்றியும் உங்களுக்கு இந்த அனர்த்தம் ஏற்பட்டமை பற்றியும் சுருக்கமாகச் சொல்ல முடியுமா?
பதில் : எனது பெயர் விநாயகமூர்த்தி லோகேஸ்வரன்.வயது 38.நான் ஒரு மீனவன்.எனது சொந்த இடம் கழுவாங்கேணி.எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.இந்தப் புன்னைக்குடா கடலில்தான் நான் தொழில் புரிந்து வருகின்றேன்.
1995 ஆம் ஆண்டு மீன் பிடிக்காகப் படகில் சென்றுகொண்டிருந்தபோது மர்மப் பொருளொன்று மிதந்து வந்தது.அதை நான் எடுத்ததும் அது வெடித்துச் சிதறியது.அதனுடன் சேர்ந்து எனது கைகளும் பறந்துவிட்டன.அது கன்னி வெட்டியெனப் பிறகு அறிந்தேன்.
அன்று முதல் இன்று வரை இரண்டு கைகளும் இல்லாமலேயே நான் வாழ்ந்து வருகிறேன்.இருந்தும்,எனது வேலைகளை நானே செய்து வருகிறேன்.பிறரின் உதவியை நாடவில்லை.
கே:நீங்கள் இரண்டு கைகளையும் இழந்துள்ளபோதிலும்,கைகள் உள்ளவர்களை விடவும் மிகவும் திறமையாகச் செயலாற்றுவதாகக் கேள்விப்பட்டோம்.அது பற்றிக் கூறமுடியுமா?
ப:உண்மைதான்.மற்றவர்கள் பார்வையில்தான் நான் கைகள் இழந்தவன்.எனது பார்வையில் அப்படி இல்லை.எனக்கு கைகள் இல்லை என்பதை நான் உணர்ந்ததே இல்லை.இரு கைகளும் உள்ளவர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் நான் செய்கிறேன்.இன்னும் சொல்லப் போனால் அவர்களை விடவும் அதிகமாகவே செய்கிறேன் என்று
 சொல்லலாம்.
என்னால் மோட்டார் சைக்கிள் ஓட்டமுடியும்.படகைச் செலுத்த முடியும்.ஆடைகள் உடுத்த முடியும்.பாரம் தூக்க முடியும்.வாயின் உதவியால் எழுத முடியும்.உணவு உண்ணமுடியும்.
நான் ஒரு மீன் வாடியில் வேலை செய்கிறேன்.அங்குள்ள அனைத்து வேலைகளையும் நானே செய்கிறேன்.சுருக்கமாகச் சொல்லப்போனால் அந்த முதலாளி அவரது வேலைகள் அனைத்தையும் என்னிடமே ஒப்படைத்துள்ளார்.பதில் முதலாளி போலவே நான் 
செயற்படுகிறேன்.
கைகள் இல்லாவிட்டாலும் மிகவும் திறமையாக-கைகள் உள்ளவர்களை விடவும் நேர்த்தியாக என்னால் வேலை செய்ய முடியும் என்பதால்தான் அவர் முழுப் பொறுப்பையும் என்னிடம் ஒப்படைத்துள்ளார்.
லொறிகளுக்கு மீன் பெட்டிகளை ஏற்றுவது,அவற்றில் இருந்து இறக்குவது,கணக்குகள் பார்ப்பது,வங்கிகளுக்குச் சென்று பணம் வைப்பில் வைப்பது,எடுப்பது என இந்தத் தொழிலுடன் சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளையும் நானே செய்கிறேன்.
கே:உங்களுக்கு இப்படியொரு நிலைமை ஏற்பட்டமைக்காக நீங்கள் வருந்துவதுண்டா?
ஆரம்பத்தில் அந்த வருத்தம் இருந்தது.பிறகு கைகள் உள்ளவர்களைப்போல் என்னால் வேலை செய்யக்கூடிய ஆற்றல் வந்ததும் நான் வருந்துவதில்லை.இரண்டு கைகளும் இருப்பது போன்றே நான் 
உணர்கிறேன்.
என்னால் சுமார் 80 வீதமான பணிகளைச் செய்ய முடிகின்றது.ஆதலால் எனக்கு எதுவித வருத்தமும் இல்லை.
கே:அந்த விபத்தின் பின்னர் உங்களின் தொழிலில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதா அல்லது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா?
ப:எனது தொழிலை இது பாதிக்கவில்லை.ஆனால்,முன்னேற்றம் தடைப்பட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும்.என்னிடம் மீனவத் தொழில் அனுபவம் நிறையவே இருப்பதால் பணம் இருந்தால் என்னால் இத்தொழிலில் முன்னேற முடியும்.ஒரு முதலாளியாக 
மாற முடியும்.
எனக்குத் தேவையாக இருப்பது மீன் ஏற்றக்கூடிய ஒரு வாகனம்தான்.அதை வாங்குவதற்கு யாராவது உதவி செய்தால் கைகள் இல்லாத நிலையிலும் என்னால் முன்னேற முடியும்.சாதித்துக் காட்டமுடியும்.உடற்குறைபாடுகள் முன்னேற்றத்துக்குத் தடை இல்லை என்பதை என்னால்
 நிரூபிக்க முடியும்.
புலம்பெயர்ந்த தமிழர்களிடம் இருந்தோ அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களிடம் இருந்தோ இந்த உதவியை நான் நாடி நிற்கின்றேன்.நல்லுள்ளம் படைத்தவர்கள் எனது முன்னேற்றத்துக்கு உதவ முன்வர வேண்டும்.
கைகள் இல்லை என்பதற்காக பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தமாட்டேன்.கைகள் இல்லாமலும் சாதிக்கமுடியும் என்பதை நிரூபித்துக் காட்டுவேன்.அதற்காக இந்த உதவிகள் எனக்குத் தேவைப்படுகின்றன.-என்கிறார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>>

Blogger இயக்குவது.