திங்கள், 15 மே, 2017

யாழில் பலகோடி ரூபா செலவில் உருவாகின்றது பெரிய புத்த விகாரை

யாழ். நாவற்குழி பகுதியில் பலகோடி ரூபா செலவில் மிகப் பெரிய புத்த விகாரை ஒன்று அமைப்பதற்கான பணிகள் மிக மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த புத்த விகாரைக்கான அடிக்கல்லினை 523ஆவது படைப்பிரிவின் தளபதி நேற்று நாட்டி வைத்தார்.
இறுதி யுத்தத்தின் பின்னரான 2010 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த ஒரு தொகுதி சிங்கள குடும்பங்கள் யாழ். ரயில் நிலையத்தில் தஞ்சம் புகுந்து கொண்டனர். இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

இவ்வாறு நிலைகொண்ட அவர்கள் தாம் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என்றும், யாழில் குடியேறப்போவதாகவும் தெரிவித்திருந்தார்கள்.
இதன்படி அந்த காலப்பகுதியில் வடமாகாண ஆளுநராக கடமையில் இருந்த சந்திரசிறியின் பணிப்பில் ரயில் நிலையத்தில் தங்கியிருந்த சிங்கள குடும்பங்கள் நாவற்குழி பகுதியில் குடியேற்றப்பட்டனர்.
ஆரம்பத்தில் அங்கு சிறிய தொகை குடும்பங்கள் குடியேற்றப்பட்ட போதும், தற்போது அங்குவாழும் சிங்கள குடும்பங்களின் தொகை அதிகரித்து காணப்படுகின்றது.
குறித்த சிங்கள குடியேற்றப் பகுதிக்கு அரச தரப்பு மற்றும் தெற்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் நிதியுதவியோடு பல அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன.
இவை ஒருபுறம் இருக்கையில் அங்கு வாழும் சிங்கள குடும்பங்களின் கோரிக்கைக்கு இணங்க அப் பகுதியில் பெரிய புத்த விகாரை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன்படி குறித்த பகுதியில் பல கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள புத்த விகாரைக்கான அடிக்கல்லும் நேற்று இராணுவ தரப்பால் நாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
Blogger இயக்குவது.