நீர்வேலிக்கும் சிறுப்பிட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். உரும்பிராயைச் சேர்ந்த தம்பிராசா பாலேந்திரன் (வயது 54) என்பவரே உயிரிழந்தவராவார்.
முன்னே சென்ற இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துடன், மோட்டார் சைக்கிளில் சென்றவர் பின்பக்க மாக மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை இன்று மாலை யாழ்ப்பாணம் அரியாலை மாம்பம் சந்திக்கருகாமையில் இடம்பெற்ற மற்றொரு விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். நெடுந்தீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த தர்மகுலசிங்கம் பிரதீபன் (வயது24)என்பவரே
உயிரிழந்தவராவார்.
இவர் பயணித்த மோட்டார் சைக்கிள் வேககட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதியதாலேயே இவ்விபத்து சம்பவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டு ள்ளதுடன் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக