திங்கள், 21 நவம்பர், 2016

டுபாயில் புலம்பெயர்து தொழில் பணிபுரிவோருக்கு அவசர அறிவித்தல்!

இலங்கை மற்றும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து டுபாய்க்கு வேலைக்காக செல்லும் புலம் பெயர் தொழிலாளர்கள் தங்களுக்கான மருத்துவ காப்புறுதியை உடனடியாக பெற்றுக் கொள்ளுமாறு அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

அவ்வாறு மருத்துவ காப்புறுதி பெற்றுக் கொள்ளாதவர்கள் மாதாந்தம் 500 திர்ஹம் அபராதமாக செலுத்த வேண்டும் என டுபாய் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மருத்துவ காப்புறுதி பெற்றுக் கொள்ளுமாறு கடந்த ஜூன் மாதம் அரசாங்கம் அறிவித்திருந்தது,குறித்த காலம் நிறைவடைந்த நிலையிலும் டுபாயில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களில் 12 வீதமானவர்கள் தங்களுக்கான மருத்துவ காப்புறுதிகளை பெற்றுக் கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.

எனவே,மருத்துவ காப்புறுதி பெற்றுக் கொள்ளாதவர்கள் மாதாந்தம் 500 திர்ஹம் அபராதமாக செலுத்த வேண்டும் என டுபாய் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான மருத்துவ காப்புறுதியை அவர்கள் தொழில் புரியும் நிறுவனங்கள் மற்றும் தொழில் வழங்குநர்களே பெற்றுக் கொடுக்க வேண்டும்.மேலும்,இதற்கான பணத்தை புலம்பெயர் தொழிலாளிகளிடம் அறவிடுவது சட்டவிரோதமான செயல் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வீட்டுப் பணிப்பெண்கள், வீட்டுச் சாரதிகளுக்கு அவர்களுடைய முதலாளிகளே மருத்துவ காப்புறுதியை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

அபுதாபியில் மருத்தவ காப்புறுதி முன்னதாகவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் மருத்துவக் காப்புறுதி இருந்தால் மட்டுமே குடும்பங்களை வரவழைப்பதற்கான வீசா அனுமதி வழங்கப்படும் என்பது
 குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.