செவ்வாய், 3 ஜனவரி, 2017

இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் குழு மோதல் நால்வர் கைது!

வவுனியா கற்குழிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் குழு மோதல் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா கற்குழி பகுதியில் உள்ள இரு குழுக்களுக்கிடையில் முரண்பாடுகள் இருந்துள்ளது. புதுவருட தினத்தன்று
 ஒரு குழுவினர் தமது வீட்டில் பாட்டு போட்டு
 ஆடிக் கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த மற்றுமோர் குழுவினர் அங்கு வந்து பாட்டு போட்டு ஆடிக் கொண்டிருந்தவர்களுடன் முரண்பட்டுக் கொண்டதுடன் வாள், கம்பிகள், பொல்லு களால் அவர்கள் மீது தாக்கவும் 
முயற்சித்தனர்
இதனையடுத்து குறித்த வீட்டில் இருந்த பெண்கள் அதனை சமரசம் செய்ய முயற்சித்துள்ளனர். இதன்போது அங்கு வந்த இளைஞ ர்கள் வீடு புகுந்து தாக்க முற்பட்ட போது இடம்பெற்ற கைகலப்பில்
 இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதி க்கப்பட்டிருந்தனர். இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்திய வவுனியா பொலிசார் வாள்வெட்டு,
 குழுமோதல் தொடர்பில் நான்கு பேரை கைது செய்துள்ளதுடன் மேலும் மூவரை தேடி வருவதாகவும் தெரிவித்தனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.