யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத்தெரு வீதியிலுள்ள வேம்படி மகளிர் கல்லூரிக்கு அருகாமையில் வாள்வெட்டுக்குழுவைச் சேர்ந்த 8 பேர் வாள்களுடன் நடமாடியுள்ளனர் என
தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் சினிமா பாணியில் கைகளில் இருந்த வாளை வீதியை தொடுமாறு வைத்துக்கொண்டு, வீதியை உரசியபடி நடமாடித்திரிந்துள்ளனர் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை 7.30 மணியளவில் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்து இறங்கிய 8 பேர் கொண்ட கும்பலே இவ்வாறு
நடமாடியுள்ளனர்.
குறித்த சம்பவம் யாழ் பழைய பொலிஸ் நிலையம், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம், பிரதி பொலிஸ்மா அலுவலகம் என்பனவற்றுக்கு 500 மீற்றர் தொலைவிலேயே நடைபெற்றுள்ளதாக
குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை நேற்று பிற்பகல் யாழ். கோப்பாய் சந்தியில் உள்ள கள்ளுத்தவறனை முன்பாக 5 மோட்டார் சைக்கிளில் வந்த 9 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியதில் 8 பேர் காயமடைந்ததோடு 3 வாகனங்களும் சேதமடைந்திருந்தன.
இவ்வாறு யாழில் நேற்று வாள்வெட்டுக்குழு துணிகரமான முறையில் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொண்டுள்ளது.
யாழ். மாவட்டத்தில் குற்றச் செயல்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக அண்மையில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண தெரிவித்திருந்த நிலையில் நேற்று நடைபெற்ற சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக