யாழ்.வைத்தியசாலை ஒன்றில் விடுதியில் தங்கியிருந்த நோயாளிகளிற்கு கடந்த 7ஆம் திகதி மருந்து வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இது குறித்து நோயாளி ஒருவர் வடக்கு ஆளுநருக்கு எழுத்துமூலம் முறைப்பாடளித்துள்ளதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும், கடந்த 7ஆம் திகதி சுகாதார தொழிற்சங்கங்கள் பல வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தன.
அன்று, யாழ் மாவட்டத்திலுள்ள வைத்தியசாலையொன்றின் விடுதி ஒன்றில் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற நோயாளிகளிற்கே மருந்து வழங்கப்படவில்லையென குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் தாதிய தொழிற்சங்க தரப்பை
தமிழ்பக்கம்
தொடர்பு கொண்டு கேட்டபோது, குறிப்பிட்ட சம்பவத்திற்கும், தாதிர் பணிப்புறக்கணிப்பிற்கும் தொடர்பில்லையென மறுத்தனர்.
அன்று தாதியர்கள் பலர் பணிக்கு சென்றிருந்ததாகவும், வைத்தியசாலை நிர்வாக ரீதியான காரணமே இப்படியான சம்பவத்திற்கு வழிவகுத்ததாகவும் தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக