திங்கள், 6 ஜூன், 2016

கொஸ்கம ஆயுத களஞ்சியத் தீ! ஒருவர் பலி:45 பேர் காயம்!!

கொஸ்கம சலாவ இராணுவ முகாமின் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட தீ நள்ளிரவுடன் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த விபத்தில் வெடிபொருட்கள் வெடித்துச் சிதறியதில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்தார். அத்துடன் பொதுமக்கள் உட்பட 47 பேர் 
காயமடைந்தனர்.
 தீ விபத்துக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதையடுத்து 1 கிலோமீற்றர் சுற்றளவில் உள்ள வீடுகள் தவிர ஏனையவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர கீழே கிடக்கும் இனந்தெரியாத பொருட்களை தொட வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு 
எச்சரிக்கை 
விடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தீ விபத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இன்னமும் தெரியவில்லை எனத் தெரிவித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர இந்த விவரம் இன்றைக்குள் 
எப்படியும் தெரிய 
வரும் எனக் கூறினார். மேலும் வெடி விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய கால அவகாசம் தேவை என்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை தீ பற்றி எரிந்த ஆயுதக் கிடங்கே இலங்கை இராணுவத்தின் மிகப் பெரிய ஆயுதக் களஞ்சியமாகும். தவிர கனரக ஆயுதங்கள் களஞ்சியப்படுத்தப்படுவதும் இங்கேயே என்பதால் சேதங்கள் மிகப்பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. .
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>  .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.