யாழ் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் புதிதாக அனுமதி பெற்ற 306 ஆசிரிய பயிலுநர்களுக்கான வரவேற்புபசார விழா கலாசாலை அதிபர் வீ. கருணலிங்கம் தலைமையில் 10.06.2016 காலை
நடைபெற்றது.
இதில் பிரதம விருந்தினராக இந்தியத்துணைத் தூதர் ஸ்ரீமான் ஆறுமுகன் நடராஜனும் சிறப்பு விருந்தினராக கலாசாலையின் முன்னாள் அதிபர் வே.கா. கணபதிப்பிள்ளையும் விசேட விருந்தினராக மத்திய கல்வி அமைச்சின் ஆசிரிய கல்வி நிர்வாகப் பிரிவுக்கான உதவிக்கல்விப் பணிப்பாளர் இ.செந்தில்மாறனும் கலந்து கொண்டனர். கலாசாலையில் உள்ள யோகலிங்கேசுவரர் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசையைத் தொடர்ந்து விருந்தினர்களும் புதிய மாணவர்களும் ஊர்வலமாக விழா மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கலாசாலையின் பிரதி அதிபர் ச.லலீசன், உபஅதிபர் த.கோபாலகிருஷ்ணன், திசைமுகப்படுத்தல் பயிற்சி இணைப்பாளர் வே. திருச்சபேசன், மாணவர் மன்றக் காப்பாளர் பொ.சற்குணநாதன் அண்மையில் இளைப்பாறுகை பெற்ற விரிவுரையாளர் எம்.ஜே.எஸ். முத்துக்குமாரசாமி ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கினர். புதிய ஆசிரிய மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக