கூட்டாளி” திரைப்படம் நோர்வேயில் முதல் தடவையாக திரையிடப்படுகிறது. எதிர்வரும் ஞாயிறு 25.09.16 மாலை 16.00 மணி ரோமமென் சேனாவில் ( Rommen Scene ) வில் திரையிடப்படுகிறது. தொடர்ந்து தமிழர்கள் வாழ்கின்ற 18 நாடுகளில் திரையிடப்படும்.
ஈழத்தமிழர்களின் நீண்ட காலக் கனவைச் சுமக்கும் ஒரு திரைக்காவியம் “கூட்டாளி” இயக்குனர், நடிகர் அமரர் மணிவண்ணன் அய்யா, இயக்குனர் சீனுராமசாமி ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சி.நிரோஜன் இயக்கி நடித்திருக்கிறார்.
தமிழீழம் மலர்ந்திருந்தால் ஈழத்தமிழர்களின் வாழக்கை எப்படி அமைந்திருக்கும் என்ற கருவை முன்வைத்து உருவான சிறந்த திரைப்படம்.
தமிழீழத்தில் நடந்த இறுதி போரின் கொடுமைகளையும் எடுத்துச் சொல்கிறது இத்திரைப்படம்.
இயக்குனர் நிரோஜனின் கடிதத்தைப் படியுங்கள், வந்து திரையரங்கை நிறையுங்கள்.
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு”
என் தாய்த்தமிழ் உறவுகளே.!
ஈழத்தமிழனாகிய நான் “கூட்டாளி” என்னும் ஈழத்திரைப்படத்தை இயக்கி உங்கள் முன் சமர்ப்பிப்பதில் பெருமை அடைகிறேன். எனக்கு ஆதரவளித்ததர்க்காக உங்கள் அனைவரையும் இக்கடிதம் மூலமாக தனித்தனியே வணங்கி வரவேற்கிறேன். தமிழகத்தில்
ஒரு நேர்த்தியான
, சரியான ஈழத்திரைப்படத்தை இயக்குவதில் நான் அடைந்த தடைகளை விட, தற்போது இதை உங்கள் முன் கொண்டுவருவதற்கு பல இன்னல்களையும், பிரச்சனைகளையும் எதிர்நோக்கி நிற்கிறேன். இத்திரைப்படத்திற்கு இந்தியாவில் ஏன் தணிக்கை இல்லை மற்றும்
திரையிட முடியாது.
எப்படியாவது இப்படத்தை ஒவ்வொரு உணர்வுள்ள, மானமுள்ள தமிழரிடமும், மனிதநேயமுள்ள அனைத்து மனிதர்களிடமும் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பதே இப்போது எமது போராட்டம். அந்த போராட்டத்தில் என்னை உங்களோடு முழுமையாக இணைத்துக்
கொள்கின்றேன்.
எம் மக்கள் அனைவரும் இத்திரைப்படத்தைக் காண வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இப்போது இங்கு படத்தை நோர்வேயில் வெளியீடு செய்யும் என் அண்ணன்மார்களிடம் மறு திகதி வாங்கி இதே திரையில் உங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் குறிப்பாக மாற்று மொழி நண்பர்களையும் அழைத்து வந்து இத்திரைப்படத்தை அவர்களுக்கு காண்பிப்பீர்களேயானால் அதுவே
எமது வெற்றி.
பல இயக்குநர்களையும், கதாநாயகர்களையும் உச்ச நட்சத்திரங்களாக கொண்டு போய் நிறுத்தியவர்கள் ஈழத்தமிழர்கள் என்பது மறுக்க முடியாத, மறைக்க முடியாத உண்மை. ஒரு சிலர் என்னை அகதி என்பார்கள் அவர்களுக்குத் தெரியாது அகதியாக அலையும் தமிழர்
தான் இந்த அகிலத்தை ஒரு நாள் ஆளப்போகிறார்கள் என்பது. ஈழத்தில் பிறந்த எனது ரத்த சொந்தங்கள் பல தளங்களில், பல நாடுகளில், பல துறைகளில் பல சாதனைகளை எந்த தலைக்கணமும் இல்லாமல் வெற்றி நடை போடுவதை நான் ஊடகங்கள் நண்பர்கள் வழி கேட்கும்போது அதை எனது தனிப்பட்ட வெற்றியாகவே எண்ணி
மகிழ்ச்சியடைவேன்.
உறவுகளே, ஊடக நண்பர்களே இத்திரைப்படத்தை வெவ்வேறு நாடுகளில் வாழும் எமது உறவுகளிடம் நீங்கள் தொலைபேசியில் பேசும்போது ஒரு நிமிடம் இதைப்பற்றி அவர்களுக்கு எடுத்து சொல்லி அவர்களையும் படம் பார்க்க வைக்கும் வகையில் எமக்கு உதவி செய்யுமாறு
மிகத்தாழ்மையுடன்
எமது படக்குழு உங்களிடம் வேண்டி நிற்கிறது. இப்படத்தில் வரும் பாதித் தொகையை போரால் பாதிக்கப்பட்ட எம்மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது தான் எனதும், எனது தயாரிப்பாளரின் விருப்பமும் என்பதை இங்கே தெரிவித்து கொள்கிறேன்.
திரைப்படத்துறையிலும் இன்னும் பல துறைகளிலும் எனது உறவுகளை வளர்த்துவிடுவதற்கு இந்தப்படத்தின் மூலமாக கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
தங்களது கருத்துக்களையும்
, ஆலோசனைகளையும் என்னுடன் பகிர்ந்து கொண்டு என்னையும் என் போன்ற கலைஞர்களையும் வளர்த்து விடுவீர்கள் என்ற திடமான நம்பிக்கை எமக்கு உண்டு. இத்திரைப்படத்தை உங்கள் கண்முன்னே வெற்றிகரமாக கொண்டு வந்து சேர்ப்பதற்கு அனைத்து வழிகளிலும் உதவிய எமது உறவுகளின் கைகளை இறுக்க
பற்றிக்கொள்கிறோம்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக