யாழ் உடுவில் மகளீர்கல்லுாரியில் சற்று முன்வரை பெரும் பதற்ற நிலை தொடர்ந்து கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை தென்னிந்திய திருச்சபை ஆயர் நியமித்த அதிபர் மற்றும் பாடசாலையில் கற்பிக்கும் ஒருபகுதி
ஆசிரியர்கள் பாடசாலை வளாகத்திற்குள் நுழைய முற்பட்ட போது அதனை அப்பாடசாலையில் கற்கும் மாணவிகள் தடுத்து நிறுத்த முற்பட்டனர். அதன் போது மாணவிகளை புதிதாக நியமிக்கப்பட்ட அதிபருக்கு சார்பானவர்கள் அடித்ததாகவும் துாசண வார்த்தைகளால் திட்டியதாகவும், ‘எங்களை கட்டிப்பிடிக்கவோ நிற்கின்றீர்கள்‘ என கேவலமாக ஏசியதாகவும் மாணவிகள் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சற்று முன்வரை பாடசாலை வளாகத்திற்கு மாணவிகள் மற்றும் பெற்றோர் பழைய அதிபரான சிராணிமீல்ஸ்சிற்கு ஆதரவாக களத்தில் நிற்கின்றனர். அங்கு பொலிஸ் உயரதிகாரி மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், மாகாணசபை உறுப்பினர்கள் கஜதீபன், சர்வேஸ்வரன் கல்வி அமைச்சர் குருகுலராஜா ஆகியோர் சிரானிமீல்ஸ்சுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
பெற்றோர்கள் தற்போது எடுத்த முடிவின் படி தொடர்ந்து சிராணி அம்மையாரே அதிபராக இருக்க வேண்டும் எனவும் அல்லாதுவிடின் தாம் தமது மாணவிகளை வேறு பாடசாலைகளுக்கு சேர்க்கப் போவதாகவும் கூறிக் கொண்டு நிற்கின்றனர்.
இதே வேளை மாணவிகளைத் தாக்கியதாகக் கூறப்படும் தென்னிந்திய திருச்சபையால் நியமிக்கப்பட்டா அதிபரும் அவரது ஆசிரியர்களும் பாடசாலையில் அடிப்பகுதிக்குள் சற்று முன்வரை மறைந்திருக்கின்றர். இதே வேளை சற்று முன் சுமந்திரனின் வலதுகரமாகத் தொழிற்படும் மாகாணசபை உறுப்பினர் சயந்தன் பாடசாலையில் மறைந்திருக்கும் புதிய அதிபர் குழுவைச் சந்திப்பதற்காக சென்று கொண்டிருப்பதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக