நீர்வேலி பகுதியில் 6 வயது சிறுமியை அடித்து துன்புறுத்திய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் அச் சிறுமியின் சித்தி என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அப் பெண் சிறுமிக்கு செய்த கொடூர சித்திரவதையானது நேற்று காலை முதல் இணையத்தளங்களில் வெளியாகிய நிலையில் பலரும் அதற்கு தமது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சிறுவர் நன்னடத்தை பிரிவு, குறித்த பெண்ணுக்கு எதிராக காவல் துறையில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தமைக்கு அமையவே அவர் கைது செய்யப்பட்டதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல் துறை மேற்கொண்டு வரும் நிலையில் , பெண்ணுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக