இந்திய அரசாங்கம் எழுப்பிய கரிசனைகளையடுத்து, கச்சதீவில் புதிய தேவாலயத்தை அமைக்கும் பணிகளை சிறிலங்கா அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது.
இந்தச் சர்ச்சைக்குத் தீர்வு காணப்படும் வரையில், புதிய தேவாலயக் கட்டுமானப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன
தெரிவித்துள்ளார்.
யாழ்.ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் வேண்டுகோளின் பேரிலேயே சிறிலங்கா கடற்படை இந்தக் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய தேவாலய கட்டுமானப் பணிகளுக்கு கடந்த திங்கட்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
அதேவேளை, 1974ஆம் ஆண்டு உடன்பாட்டுக்கு அமைய சிறிலங்காவிடம் கையளிக்கப்பட்ட கச்சதீவில் சிறிலங்கா கடற்படை கடற்படை முகாம் ஒன்றை அமைப்பதாகவும், இதுகுறித்து சிறிலங்கா அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புமாறு கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்திருந்தார்.
எனினும், கச்சதீவில் கடற்படை முகாமை அமைக்கவில்லை என்று சிறிலங்கா கடற்படைத் தளபதி
தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக