வலிகாமம் வடக்கு இந்து ஆலயங்கள் மீள் புனருத்தாரண சபைக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (27-05-2016) பிற்பகல் -2 மணி முதல் தெல்லிப்பழை லயன்ஸ் கழக மண்டபத்தில் தெல்லிப்பழைப் பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலர் பா. ஜெயகரன் தலைமையில்
இடம்பெற்றது.
தெல்லிப்பழைப் பிரதேச செயலகத்தின் வழிகாட்டலில், அகில இலங்கை சைவமகாசபையின் அனுசரணையில் நடைபெற்ற இந்த அங்குரார்ப்பணக் கூட்டத்தில் மாவை சித்தி விநாயகர் ஆலய பரிபாலன சபையின் செயலாளரும், வலி.வடக்குச் செஞ்சிலுவைச் சங்கத்தின் செயலாளருமான சி.நாகேஸ்வரன் தலைவராகவும், வலிகாமம் கல்வி
வலய ஆசிரிய
ஆலோசகர் தா. நிகேதன் செயலாளராகவும், வவுனியா பல்கலைக் கழக வளாகப் போதானாசிரியர் சி.சந்தான கிருஷ்ணன்பொருளாளராகவும், ஓய்வு நிலை ஆசிரிய ஆலோசகர் திருமதி -அ.ஞானேஸ்வரி
உபதலைவராகவும்,
எஸ்.ரஞ்சிதன் உப செயலாளராகவும், ச.லக் ஷிகா பத்திராதிபராகவும், ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டனர். வைத்திய கலாநிதி பி.நந்தகுமார், கீரிமலை ரேணுகா ஆச்சிரம பீடாதிபதி சிவஸ்ரீ உருத்திர புரீஸ்வரக் குருக்கள், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய திருப்பணிச் சபைச் செயலாளர் ஆர். பேரின்பநாயகம், அகில இலங்கை சைவ மகா
சபையின்
செயலாளர் வைத்தியகலாநிதி ப. நந்தகுமார், தெல்லிப்பழை பிரதேச செயலர் சிறிமோகனன் ஆகியோர் போஷகர்களாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், சட்டத்தரணிகளான ஜெ.ஜெயரூபன், கு.புரந்திரன்
ஆகியோர் சட்ட
ஆலோசகர்களாகவும் தெரிவு செய்யப்பட்டனர். அத்துடன் வலிகாமம் வடக்கில் மீள் குடியமர்த்தப்பட்ட மற்றும் மீள்குடியமர்த்தப்படவுள்ள 17 கிராம சேவகர் பிரிவுகளையும் பிரதிநித்துவப்படுத்தும் வகையில் 17 உறுப்பினர்கள் தெரிவும் நடைபெற்றது.
உறுப்பினர்கள் தெரிவைத் தொடர்ந்து திறந்த கலந்துரையாடலும் இடம்பெற்றது. இதன் போது வலிகாமம் வடக்கில் கடந்த கால போர்ச் சூழல் காரணமாகச் சேதமடைந்த அனைத்து ஆலயங்களினதும் சேதவிபரங்கள் தொடர்பில் தகவல் திரட்டி அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுப்பதெனவும், ஆலயங்களைப் பதிவு செய்தல் தொடர்பிலும் கவனம்
செலுத்தப்பட்டது.
இந்த அங்குரார்ப்பணக் கூட்டத்தில் வலி.வடக்குப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆலயங்களின் நிர்வாக சபை உறுப்பினர்கள், அறநெறிப் பாடசாலை நிர்வாகிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அகில இலங்கை சைவ மகா சபையின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும்
கலந்து கொண்டனர்
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக