சனி, 21 மே, 2016

இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மாங்குளத்தில் மீள்ப்பு

முல்லைத்தீவு மாங்குளம் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடொன்றிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்த சடலம் இன்று சனிக்கிழமை காலை மீட்கப்பட்டதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
30 வயதுடைய நாகலிங்கம் யோகேஸ்வரன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் 
குறிப்பிட்டனர்.
இது கொலையா? அல்லது தற்கொலையா? என்று இதுவரை அறியப்படாத நிலையில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.