வெள்ளி, 27 மே, 2016

வியட்நாம் பிரதமருடன் இலங்கை ஜனாதிபதி மைத்திரி சந்திப்பு

ஜப்பானில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் வியட்நாம் பிரதமர் நுயென் ஜுவான் புக்கும் இடையில் இன்று வியாழக்கிழமை இருதரப்பு பேச்சு நடத்தப்பட்டது. ஜி - 7 நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜப்பான் வந்த இலங்கை
 ஜனாதிபதி, 
ஜப்பான் நகோயா டோக்கியோ ஹோட்டலில் வியட்நாம் பிரதமருடன் முக்கிய பேச்சு நடத்தினார். அரிசி மற்றும் ஏனைய பயிர்களுடன் தொடர்புடைய தொழிநுட்பம் மற்றும் விவசாயத்துறையில் 
நெருங்கிய கூட்டுறவை 
ஏற்படுத்துவதற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் வியட்நாம் பிரதமர் நுயென் ஜுவான் புக்கும் இதன்போது இணக்கம் தெரிவித்தனர். வியட்நாவின் தொழில் முயற்சியாளர்களை இலங்கையில் முதலீடு செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
 இதன்போது 
அழைப்பு விடுத்தார். விவசாயம், தொழிநுட்பம், வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு தமது நாடு விரும்புவதாக வியட்நாம் பிரதமர் தெரிவித்தார். அத்துடன் தமது வருடாந்த வர்த்தக பெறுமதி 200 மில்லியன் 
டொலர்கள் வரை 
அதிகரித்துள்ளது என்று சுட்டிக்காட்டிய அவர், இதனை மேலும் அதரிகரிப்பதற்கான பல வாய்ப்புகள் இருக்கின்றன என்றும் குறிப்பிட்டார். தாம் பிரதிப் பிரதமராக இருந்த சந்தர்ப்பத்தில் ஏற்கனவே மேற்கொண்டிருந்த சந்திப்பு குறித்து நினைவுகூர்ந்த வியட்நாம் பிரதமர்,
 பிராந்திய மற்றும்
 சர்வதேச மன்றங்களில் வியட்நாமுடன் நெருங்கிய கூட்டுறவைப் பேணுவது தொடர்பில் இலங்கைக்கு நன்றி தெரிவித்தார். கடல் மார்க்க பாதுகாப்புக்கான இலங்கையின் பங்களிப்புகளை வலியுறுத்திய அவர், ஐக்கிய நாடுகள் சாசனத்தின் கடல் சட்டங்களின் கீழ் கடல் மார்க்கங்களின் 
பாதுகாப்பை மேலும்
 உறுதி செய்யும் வகையில் இரண்டு நாடுகளும் நெருங்கிப்பணியாற்ற முடியும் எனவும் தெரிவித்தார். விவசாய அமைச்சர் என்றவகையில் தாம் வியட்நாமுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தை நினைவுகூர்ந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விவசாய,
 தொழிநுட்பத்தில் 
வியட்நாம் அடைந்திருக்கும் பாரிய அபிவிருத்திகளைப் பாராட்டியதோடு, இந்த தொழிநுட்ப அறிவைப் பகிர்ந்துகொள்வதில் இலங்கை பயனடைய முடியும் என்றும் தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு 
ஜனாதிபதி மைத்திரிபால
 சிறிசேன விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்ட வியட்நாம் பிரதமர், மிக விரைவில் தாம் இலங்கைக்கு விஜயம் செய்வதாகவும்
 கூறினார்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொ
ம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.