புதன், 15 பிப்ரவரி, 2017

மினரல் வாட்டர், வீட்டு உணவு வேண்டும் என சிறையில சசிகலா கோரிக்கை!

  சசிகலா,  சிறையில் வீட்டில் சமைக்கப்பட்ட உணவை கேட்டுள்ளார். மேலும், குடிக்க மினரல் வாட்டர், ,தனி ஏ.சி.அறை,வெஸ்டர்ன் டைப் கழிவறை, வேண்டும் என சசிகலா கோரிக்கை
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையையும், ரூ.10 கோடி அபராதத்தையும் சுப்ரீம் கோர்ட்டு நேற்று உறுதி செய்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. 3 பேரும் பெங்களூர் விசாரணை நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும் என்றும் நீதிபதிகள்
 உத்தர விட்டனர். 
இன்று சசிகலா தரப்பு வக்கீல்கள் உடல் நிலையை காரணம் காட்டி சசிகலா சரண் அடைய 2 வார கால அவகாசம் வாய்மொழியாக கேட்டனர். ஆனால் இதர்கு சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்தது. உடனடியாக அவர் பெங்களூர் கோர்ட்டில் சரணடைய உத்தரவிட்டனர்.
இதை தொடர்ந்து சசிகலா இன்று காலை 11. 40 மணிக்கு சசிகலா  போயஸ் கார்டனில் இருந்து மெரினா கடற்கரை சென்றார். அங்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சமாதியில் மரியாதை 
செலுத்தினார்.  அப்போது ஜெயலலிதா சமாதியில் ஓங்கி அடித்து, தனதுவாய்க்குள் முணு முணுத்தவாறு சபதம் செய்தார். சூழ்ச்சி, துரோகம், இக்கட்டு ஆகிய மூன்றில் இருந்தும் மீண்டு வருவேன் என சசிகலா சபதம் ஏற்றார் என முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கூறினார்.
பின்னர் சசிகலா ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜிஆர். வீட்டிற்கு சென்றார். அங்கு ராமாவரம் இல்லத்தில் எம்ஜிஆர் படம் முன்பு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தியானம் செய்தார். பின்னர் அங்கிருந்து  கார் மூலம் பெங்களூர் புறப்பட்டுச் சென்றார். அவருடன் தண்டனை பெற்ற இளவரசியும் சென்றார். 
இன்னும் சற்று நேரத்தில் பெங்களூரு நீதிமன்றத்தில் சசிகலா சரணடைவார். இந்த நிலையில், அவர் தரப்பில் சிறையில் தனக்கு வழங்கப்பட வேண்டிய வசதிகள் குறித்து கோரிக்கைக் கடிதம்
 வைக்கப்பட்டது.
அதில், தனக்கு நீரிழிவு நோய் இருப்பதால் வீட்டில் சமைக்கப்பட்ட உணவை கேட்டுள்ளார். மேலும், குடிக்க மினரல் வாட்டர், ,தனி ஏ.சி.அறை,வெஸ்டர்ன் டைப் கழிவறை, 24 மணி நேரமும் சுடுநீர் போன்றவை தனது அறையில் கிடைக்க வசதி செய்யுமாறு
 கேட்கப்பட்டுள்ளது.
சசிகலா அடைக்கப்பட உள்ள அறையில் கட்டிலும் டிவியும் இருக்கும். அவருக்கு உணவு தயாரிக்க உதவியாளர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.