ஞாயிறு, 26 ஜூன், 2022

இலங்கையில் அரச ஊழியர்களுக்கான புதிய சுற்றுநிருபம் வெளியீடு

இலங்கையில் அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் புதிய சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.அரச நிறுவனங்களின் செயற்பாடுகளை வீழ்ச்சியடையாது தொடர்ந்தும் மறு அறிவித்தல் வரை குறைந்தளவிலான பணிக்குழாமினரை 
அன்றாட சேவைக்கு
அழைக்குமாறு அரச நிறுவன தலைவர்களுக்கு அறிவுறுத்தி சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான சுற்று நிருபம் ஒன்று.26-06-2022. இன்றைய திகதியிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி,
நிறுவனங்களின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தேவையான குறைந்தபட்ச ஊழியர்களை மாத்திரம் சேவைக்கு 
அழைக்குமாறு நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இயன்ற வரையில் பணியாளர்களை வீட்டில் 
இருந்தவாறே பணியாற்ற அனுமதிக்குமாறும் குறித்த 
சுற்றுநிருபம் மூலம் நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது .

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



புதன், 8 ஜூன், 2022

குறைந்த பட்சம் வீசா இன்றி 190 நாடுகளுக்கு இலங்கையர் பயணிக்கும் வாய்ப்பு

வீசா இன்றி குறைந்த பட்சம் 190 நாடுகளுக்கு மக்கள் பயணிக்கும் வகையில் இலங்கை கடவுச்சீட்டின் தரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாட்டிற்கான எதிர்காலம் என்ற சமூக பொறுப்புணர்வு நிகழ்ச்சி திட்டமானது, இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம்
 கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பான கடிதம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நாட்டிற்கான எதிர்காலம் நிகழ்ச்சி திட்டத்தின் ஏற்பாட்டாளர் சரத் களுகமகே தெரிவித்துள்ளார்.
கடவுச்சீட்டு மீதான சர்வதேச தரநிலைகளின் படி, இலங்கையின் கடவுச்சீட்டு மிகவும் குறைந்த நிலையில் உள்ளது.
ஆசிய நாடான, ஜப்பானியர்கள் விசா இன்றி 190 நாடுகளுக்கு பயணம் செய்யலாம், ஆனால், எமது நாட்டவரால் விசா இல்லாமல் செல்ல முடியுமா” என நாட்டிற்கான எதிர்காலம் நிகழ்ச்சி திட்டத்தின் ஏற்பாட்டாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு இந்த நாட்டின் அரசியல் தரப்பினரே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்பதை தாம் கடுமையாக வலியுறுத்துவதாக சரத் களுகமகே குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரம் அடைந்த பின்னர் ஆட்சி அமைத்த எந்த அரசும் இதில் கவனம் செலுத்தவில்லை எனவும் அவர்களிடம் அதிகாரம் இருப்பதே அதற்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
சபாநாயகரின் கோரிக்கைக்கு ஏறக்குறைய அனைத்து நாடுகளும் உரிய கவனம் செலுத்துகின்றன எனவும் நாட்டிற்கான எதிர்காலம் நிகழ்ச்சி திட்டத்தின் ஏற்பாட்டாளர் கூறியுள்ளார்.
அனைத்து தூதுவர்களையும் சந்திப்புக்கென நாடாளுமன்றத்திற்கு சபாநாயகரால் அழைக்க முடியும் எனவும் அனைத்து இலங்கையர்களுக்கும் விசா இன்றி பயணம் செய்வதற்கும் தொழில் செய்வதற்கும் வாய்ப்பளிக்குமாறு வாய்மொழியாகவும் எழுத்து மூலமாகவும் பகிரங்கக் கோரிக்கை விடுக்க முடியும் எனவும் சரத் களுகமகே 
குறிப்பிட்டுள்ளார்.
எனவே, குடிசார் செயற்பாட்டாளர் என்ற வகையில், நாட்டு மக்களுக்காக அதனைச் செய்வதில் கவனத்தைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன் என சரத் களுகமகே, சபாநாயகரிடம் வேண்டுகோள் 
.விடுத்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>


Blogger இயக்குவது.