செவ்வாய், 26 செப்டம்பர், 2017

பிறந்தநாள் வாழ்த்து. திரு.சுந்தரலிங்கம் சத்தியன். 26.09.17

நவற்கிரியை பிறப்பிடமாகவும்  மார்க்கம் ஒன்ட்டாரியோ கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :சுந்தரலிங்கம்  சத்தியன் அவர்களின்  பிறந்த நாளை இன்று 26.09.2014 தனது இல்லத்தில்
 வெகு சிறப்பாக கொண்டாடுகின்றர் .இவரை அன்பு அப்பா அம்மா மனைவி பிள்ளைகள் சகோதரர்கள்  மாமாமார் மாமி மார் பெரியப்பாமார்  ,பெரியம்மாமார் சித்தப்பாமார்  சித்தி மார் 
 மச்சாள்மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்  நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் இறை  ஆசியுடன்  எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து உலகமும்
 உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு   பல்லாண்டு காலம்வாழ்கவென  வாழ்த்துகின்றோம் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றது
இங்கு அழுத்தவும் நவற்கிரி .கொம்1 செய்தி >>


வியாழன், 7 செப்டம்பர், 2017

பிறந்த நாள் வாழ்த்து திருமதி தயாவரன் 07.09.17.

யாழ் அச்சுவேலியை  பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள 
திரு .திருமதி .தயாவரன் ( சுசிகலா ) அவர்களின் பிறந்த நாள்  07.09.2017.இன்று மிகவும் சிறப்பாக அவரது இல்லத்தில்
 கொண்டாடுகின்றார்
  பிறந்தநாள் காணும் இவ்உறவை  அன்பு கணவர்  பிள்ளைகள்,
மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி உறவினர்கள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து நவற்கிரி. கொம்  நிலாவரை.கொம்நவக்கிரி .கொம்   நவக்கிரி http://lovithan.blogspot.ch/
 இணையங்களும் , அச்சுவேலி உலவிக்குளம் சித்தி விநாயகர் அருள்பெற்று இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க வென 
வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




திங்கள், 15 மே, 2017

யாழில் பலகோடி ரூபா செலவில் உருவாகின்றது பெரிய புத்த விகாரை

யாழ். நாவற்குழி பகுதியில் பலகோடி ரூபா செலவில் மிகப் பெரிய புத்த விகாரை ஒன்று அமைப்பதற்கான பணிகள் மிக மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த புத்த விகாரைக்கான அடிக்கல்லினை 523ஆவது படைப்பிரிவின் தளபதி நேற்று நாட்டி வைத்தார்.
இறுதி யுத்தத்தின் பின்னரான 2010 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த ஒரு தொகுதி சிங்கள குடும்பங்கள் யாழ். ரயில் நிலையத்தில் தஞ்சம் புகுந்து கொண்டனர். இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

இவ்வாறு நிலைகொண்ட அவர்கள் தாம் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என்றும், யாழில் குடியேறப்போவதாகவும் தெரிவித்திருந்தார்கள்.
இதன்படி அந்த காலப்பகுதியில் வடமாகாண ஆளுநராக கடமையில் இருந்த சந்திரசிறியின் பணிப்பில் ரயில் நிலையத்தில் தங்கியிருந்த சிங்கள குடும்பங்கள் நாவற்குழி பகுதியில் குடியேற்றப்பட்டனர்.
ஆரம்பத்தில் அங்கு சிறிய தொகை குடும்பங்கள் குடியேற்றப்பட்ட போதும், தற்போது அங்குவாழும் சிங்கள குடும்பங்களின் தொகை அதிகரித்து காணப்படுகின்றது.
குறித்த சிங்கள குடியேற்றப் பகுதிக்கு அரச தரப்பு மற்றும் தெற்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் நிதியுதவியோடு பல அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன.
இவை ஒருபுறம் இருக்கையில் அங்கு வாழும் சிங்கள குடும்பங்களின் கோரிக்கைக்கு இணங்க அப் பகுதியில் பெரிய புத்த விகாரை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன்படி குறித்த பகுதியில் பல கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள புத்த விகாரைக்கான அடிக்கல்லும் நேற்று இராணுவ தரப்பால் நாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 30 மார்ச், 2017

நீதிபதி இளஞ்செழியன் அச்சுவேலி முக்கொலை: குற்றவாளிக்கு மரணதண்டனை தீர்ப்பு

யாழ் அச்சுவேலி பகுதியில் மூன்று பேரை வெட்டி படுகொலை செய்தமை மற்றும் கொலைசெய்யும் நோக்கில் இருவரை தாக்கி காயம் ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக, குற்றவாளிக்கு மூன்று மரண தண்டனைகளை விதித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் 
உத்தரவிட்டுள்ளார்.
வழக்கு இன்று (வியாழக்கிழமை) யாழ். மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மூன்று கொலைகளுக்கு மூன்று மரண தண்டனைகளும், இருவரை கொலை செய்யும் நோக்குடன் தாக்கி காயமேற்படுத்திய குற்றத்திற்கு 14 வருட கடூழிய சிறைதண்டனையும், 2 இலட்சம் ரூபாய் நட்டஈடும், 20 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியை சேரந்த பென்னம்பலம் தனஞ்செயன் என்பவருக்கே இத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளதென குறிப்பிட்ட நீதிபதி இளஞ்செழியன், தீர்ப்பு வழங்கப்படும் போது மன்றில் இருந்த அனைவரையும் எழுந்து நிற்குமாறும் மின் விளக்குகளையும் 
அணைக்குமாறு பணித்த பின்னர் தீர்ப்பினை எழுதியதோடு, தீரப்பெழுதிய பேனாவை உடைத்து எறிந்துள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் திகதி அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியைச் சேர்ந்த தனது மனைவியின் தாயான நி.அருள்நாயகி, மனைவியின் தம்பியான நி.சுபாங்கன் மற்றும் மனைவியின் அக்காவான யசோதரன் மதுஷா ஆகியோரை படுகொலை செய்ததோடு, மனைவியான தர்மிகா மற்றும் மனைவியின் அக்காவின் 
கணவனான யசோதரன் ஆகியோரை படுகொலை செய்யும் நோக்குடன் குற்றவாளியான தனஞ்செயன் வெட்டி காயமேற்படுத்தியமை 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 7 மார்ச், 2017

தம்பதிகளின் அன்பு !! வவுனிமக்கள் அதிசயித்து சோகமயமானது!

வவுனியா மகாரம்பக்குளம்  அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்த இணை பிரியா த்தம்பதிகளான  பொன்னையா இராஜகோபால் ‘இராஜகோபால் நாகம்மா இருவரும் வாழ்க்கையில் மட்டும் அல்லாமல் மரணத்திலும்  இணை பிரியாத்தம்பதிகளாக
 சென்றுள்ளார்கள்.
அதாவது நேற்று இரவு கணவருக்கு சுகயீனம் காரணமாக வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல ஆயுத்தமான வேளையில்  கணவருக்கு சுகயீனம்  என்பதை தாங்கிக்கொள்ள முடியாத மனைவி
 அதே இடத்தில் விழுந்து உயிரை விட்டார் 
   உடனடியாக உடல் நிலை  பாதிக்கப்படட  கணவரை  வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.   கணவரும் வைத்திய சாலையில் உயிரை விட் டார்   இவர்கள் இருவரும் வாழ்ந்த  வாழ்க்கையில்  எப்படி வாழ்ந்தார்கள்  என்பதுக்கு  அவர்களது இறப்பு சான்று 
 பகிர்கின்றது.   
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

வாள்வெட்டுக்குழுவைச் சேர்ந்த 8 பேர்யாழில் வாள்களுடன் நடமாடிர்


யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத்தெரு வீதியிலுள்ள வேம்படி மகளிர் கல்லூரிக்கு அருகாமையில் வாள்வெட்டுக்குழுவைச் சேர்ந்த 8 பேர் வாள்களுடன் நடமாடியுள்ளனர் என
 தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் சினிமா பாணியில் கைகளில் இருந்த வாளை வீதியை தொடுமாறு வைத்துக்கொண்டு, வீதியை உரசியபடி நடமாடித்திரிந்துள்ளனர் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை 7.30 மணியளவில் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்து இறங்கிய 8 பேர் கொண்ட கும்பலே இவ்வாறு 
நடமாடியுள்ளனர்.
குறித்த சம்பவம் யாழ் பழைய பொலிஸ் நிலையம், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம், பிரதி பொலிஸ்மா அலுவலகம் என்பனவற்றுக்கு 500 மீற்றர் தொலைவிலேயே நடைபெற்றுள்ளதாக 
குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை நேற்று பிற்பகல் யாழ். கோப்பாய் சந்தியில் உள்ள கள்ளுத்தவறனை முன்பாக 5 மோட்டார் சைக்கிளில் வந்த 9 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியதில் 8 பேர் காயமடைந்ததோடு 3 வாகனங்களும் சேதமடைந்திருந்தன.
இவ்வாறு யாழில் நேற்று வாள்வெட்டுக்குழு துணிகரமான முறையில் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொண்டுள்ளது.
யாழ். மாவட்டத்தில் குற்றச் செயல்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக அண்மையில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண தெரிவித்திருந்த நிலையில் நேற்று நடைபெற்ற சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 20 பிப்ரவரி, 2017

கடும் பனிப்பொழிவிற்கு மத்தியில்வடக்கின் பல பகுதிகளில், வீதிகளில்

வடக்கின் பல பகுதிகளில், கடும் பனிப்பொழிவிற்கு மத்தியில் வீதிகளில் குழந்தைகள் முதல் முதியோர் வரை இரவு பகலாக போராடி வருகின்றனர்.
படையினர் வசமுள்ள தமது பூர்வீக காணிகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெ
டுக்கப்படுகின்றது.
எனினும், இதுவரை எவ்வித தீர்வையும் வழங்காமையானது அரசின் பாராமுகத்தையே வெளிப்படுத்துகின்றதென சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்களின் சத்தியாக்கிரக போராட்டம் இன்றுடன் 22 நாட்களை எட்டியுள்ளது.
அத்தோடு, புதுக்குடியிருப்பு மக்களும் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்தோடு, பரவிப்பாஞ்சான் ராணுவ முகாமுக்கு முன்னால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டமும் இரவு பகலாக இன்றும் 
தொடர்கின்றது.
மறுபுறத்தில், காணாமல் போன தமது உறவுகள் குறித்த உண்மைத்தன்மையை வெளிப்படுத்துமாறு காணாமல் போனோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் நேற்று முதல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் போராட்டத்திற்கு இன, மத, மொழி பேதமின்றி பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றபோதும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை எவ்வித தீர்மானத்தையும் முன்வைக்காமையானது இம்மக்களை விரக்தியடைய வைத்துள்ளது.
வடக்கில் தற்போது கடும் பனிப்பொழிவு காணப்படும் நிலையில், குழந்தைகள் மற்றும் வயோதிபர்களுடன் இரவு வேளைகளில் சொல்லொணா துன்பத்தை அனுபவித்து வருவதாக தெரிவிக்கும் இம் மக்கள், தமது நிலையை கருத்திற்கொண்டு தமது நிலத்தை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை
 விடுக்கின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 15 பிப்ரவரி, 2017

மினரல் வாட்டர், வீட்டு உணவு வேண்டும் என சிறையில சசிகலா கோரிக்கை!

  சசிகலா,  சிறையில் வீட்டில் சமைக்கப்பட்ட உணவை கேட்டுள்ளார். மேலும், குடிக்க மினரல் வாட்டர், ,தனி ஏ.சி.அறை,வெஸ்டர்ன் டைப் கழிவறை, வேண்டும் என சசிகலா கோரிக்கை
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையையும், ரூ.10 கோடி அபராதத்தையும் சுப்ரீம் கோர்ட்டு நேற்று உறுதி செய்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. 3 பேரும் பெங்களூர் விசாரணை நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும் என்றும் நீதிபதிகள்
 உத்தர விட்டனர். 
இன்று சசிகலா தரப்பு வக்கீல்கள் உடல் நிலையை காரணம் காட்டி சசிகலா சரண் அடைய 2 வார கால அவகாசம் வாய்மொழியாக கேட்டனர். ஆனால் இதர்கு சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்தது. உடனடியாக அவர் பெங்களூர் கோர்ட்டில் சரணடைய உத்தரவிட்டனர்.
இதை தொடர்ந்து சசிகலா இன்று காலை 11. 40 மணிக்கு சசிகலா  போயஸ் கார்டனில் இருந்து மெரினா கடற்கரை சென்றார். அங்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சமாதியில் மரியாதை 
செலுத்தினார்.  அப்போது ஜெயலலிதா சமாதியில் ஓங்கி அடித்து, தனதுவாய்க்குள் முணு முணுத்தவாறு சபதம் செய்தார். சூழ்ச்சி, துரோகம், இக்கட்டு ஆகிய மூன்றில் இருந்தும் மீண்டு வருவேன் என சசிகலா சபதம் ஏற்றார் என முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கூறினார்.
பின்னர் சசிகலா ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜிஆர். வீட்டிற்கு சென்றார். அங்கு ராமாவரம் இல்லத்தில் எம்ஜிஆர் படம் முன்பு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தியானம் செய்தார். பின்னர் அங்கிருந்து  கார் மூலம் பெங்களூர் புறப்பட்டுச் சென்றார். அவருடன் தண்டனை பெற்ற இளவரசியும் சென்றார். 
இன்னும் சற்று நேரத்தில் பெங்களூரு நீதிமன்றத்தில் சசிகலா சரணடைவார். இந்த நிலையில், அவர் தரப்பில் சிறையில் தனக்கு வழங்கப்பட வேண்டிய வசதிகள் குறித்து கோரிக்கைக் கடிதம்
 வைக்கப்பட்டது.
அதில், தனக்கு நீரிழிவு நோய் இருப்பதால் வீட்டில் சமைக்கப்பட்ட உணவை கேட்டுள்ளார். மேலும், குடிக்க மினரல் வாட்டர், ,தனி ஏ.சி.அறை,வெஸ்டர்ன் டைப் கழிவறை, 24 மணி நேரமும் சுடுநீர் போன்றவை தனது அறையில் கிடைக்க வசதி செய்யுமாறு
 கேட்கப்பட்டுள்ளது.
சசிகலா அடைக்கப்பட உள்ள அறையில் கட்டிலும் டிவியும் இருக்கும். அவருக்கு உணவு தயாரிக்க உதவியாளர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


திங்கள், 30 ஜனவரி, 2017

தாய், தந்தை, குழந்தை கொலை சம்பவத்தில் சிக்கினார் மேலும் ஒருவர்

அம்பலங்கொட, இடம்தொட்ட பகுதியில் இடம்பெற்று முக்கொலையுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பலங்கொட – இடம்தொட்ட பிரதேசத்தில் காணிப் பிரச்சினை ஒன்றின் காரணமாக, கடந்த வருடம் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் குழந்தை ஆகியோர் இனந்தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் ஏற்கனவே ஆறு பேரை கைது செய்திருந்ததோடு நேற்று மாலை ஒருவரை கைது செய்துள்ளனர்.
ஹிக்கடுவ பிரதேசத்தை சேர்ந்தவர் நபரே கைது செய்யப்பட்டுள்ளதோடு கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக நபம்பப்படும் முச்சக்கர வண்டி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை ஏற்கனவே கைது செய்யப்பட்ட 6 பேரிடம் இருந்து மூன்று டி-56 ரக துப்பாக்கிகள் மற்றும் மூன்று கைத்துப்பாக்கிகள், துப்பாக்கி ரவைகள் ஆகியவற்றை கைப்பற்றியிருந்தமை
 குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



சனி, 14 ஜனவரி, 2017

அனைவர்க்கும் தை தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் 14.01.17

எனது அனைத்து இணைய உறவுகட்கம் எனது அன்பர்கள் நண்பர்கள் அனைவருக்கும்  என் இதயம் கனிந்த இனிய 14.01.2017. தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்பொங்கல் திருநாளை, மகர சங்கராந்தியன்று கொண்டாடுகின்றனர். காரணம், அன்று தான்,
 மகர ராசியில் நுழைகிறான் சூரியன். சங்கராந்தியை, சங்+கராந்தி என, பிரித்து பொருள் காண வேண்டும். ‘சங்’ என்றால், நல்ல முறை; ‘கிராந்தி’ என்றால், மாறுதல்! கிராந்தி என்ற சொல்லே, 
கராந்தி என மருவியுள்ளது. ‘சங்கராந்தி’ என்ற சொல்லுக்கு, நல்ல முறையிலான மாற்றம் என்று பொருள். பொதுவாக, தை மாதம் முதல் தேதியில், மகர சங்கராந்தி வரும்.
இந்நாளில், வடதிசை பயணத்தை துவக்குகிறது சூரியன். வடக்கு திசையை, ‘குபேர திசை’ என்பர். இதனால் தான், தை முதல், ஆனி வரையுள்ள ஆறு மாதங்களை சுப மாதங்களாக கருதி, திருமணம் உள்ளிட்ட அனைத்து சுப நிகழ்ச்சிகளையும் செய்கிறோம்.
சங்கரமணம் என்ற சொல்லுக்கு பிரவேசித்தல் என்று பொருள். மகர ராசியில் சூரியன் நுழையும் நிகழ்வே மகர சங்க்ராந்தி என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ராசியிலும் சூரியன் பிரவேசிப்பது தமிழ் மாதப் பிறப்பாக கடைபிடிக்கப்படுகிறது. தனுசு ராசியிலிருந்து
 மகர ராசியில் சூரியன் பிரவேசிப்பது தை மாதப்பிறப்பு என்றும் பொங்கல் பண்டிகை என்றும் தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது.
மகர சங்கராந்தி விழாவாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஒரு வருட காலத்தை இரண்டு ஆறு 
மாதங்களாகப் பிரித்து உத்திராயணம் மற்றும் தட்சியாணம் என்று அழைக்கப்படுகிறது. தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்கள் உத்திராயணம் ஆகும்.
ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய மாதங்கள் தட்சியாணம் ஆகும். தட்சியாணம் என்பது தேவர்களுக்கு இரவு பொழுதாகும் உத்திராயணம் என்பது தேவர்களின் பகல் காலமாகும். தேவர்களுக்கு பகல் காலமான உத்திராயணத்தின் முதல்
 நாளான தை மாதம் முதல் தேதி அதாவது சூரியன் மகரம் ராசியில் நுழையும் நேரத்தில் பஞ்சங்கத்தின் அடிப்படையில் உள்ள கிழமை, திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகியவற்றை கொண்டு
 சங்கராந்தி புருஷன் என்று உருவகப்படுத்தி மகர சங்க்ராந்தியின் பலன்கள் கூறப்படுகின்றன. மன்மத வருடத்திற்க்கான
 சங்கராந்தி பலன்கள்…
மங்களகரமான மன்மத வருடம் மார்கழி மாதம் 29ம் தேதி (14-01-2016) அன்று வியாழக்கிழமை சுக்ல பட்சம் வளர்பிறை சஷ்டி திதி, பூரட்டாதி நட்சத்திரம், பரிகம் நாம யோகம், கௌலவ கரணத்தில் இரவு 01-26 மணிக்கு துலா லக்கினத்தில் சங்கராந்தி (சூரியன்) பகவான் மகர ராசியில் பிரவேசிக்கிறார். பெயர் : மந்தாகினி — கல்வியில் சிறந்தவர்களுக்கு கஷ்ட நஷ்டங்கள் உருவாகலாம்.
வாகனம் : பன்றி — விவசாய பயிர்கள் சீர்கெடும் வஸ்திரம் : விசித்திரம் — அனைவரும் நலமாக இருப்பர் ஆபரணம் : சுவர்ணம் — ஆடைகளின் விலை குறையும் ஸ்நானம் : மஞ்சள் — பெண்களுக்கு கஷ்டங்கள் அதிகம் ஆயுதம் : கலப்பை — அனைவருக்கும் உணவு கிடைக்கும் கந்தம் (நறுமணம்) : சந்தனம் — அனைவரும் சுகமாக இருப்பர் புஷ்பம் : மகிழம்பூ — ஒரு சிலருக்கு கஷ்டங்கள் உண்டாகலாம் சத்திரம் : ரஜதம் — வெள்ளி விலை குறையும் சாமரம் : ஹேமம் — தங்கம் விலை குறையும் வாத்தியம் : ருத்திர வீணை — தீவிரவாதிகள்
கொல்லப்படுவார்கள் பாத்திரம் : சூர்ப்பம் — தானியங்கள் பற்றாகுறை போஜனம் : மா — உடல் ஆரோக்கியம் சிறக்கும் முக பலன் : லச்சை — தானிய விருத்தி ஜாதி : வைசியர் — வியாபாரிகளுக்கு லாபம் குறையும் திக்கு : மேற்கு திசை — உறவினர்களிடையே பகைமை அதிகரிக்கும் பட்சம் : சுக்ல பட்சம் — அனைவருக்கும் சுபிட்சம் உண்டாகும் கிழமை : வியாழன் — மழை அதிகமாக பொழியும் காலம் : இரவு — கால்நடை மேய்ப்பவர்களுக்கு கஷ்டம் லக்கினம் : துலாம் — மழை அதிகமாக பொழியும் சூரியனுக்குரிய வாகனம் குதிரை; அதற்கு, ‘சப்தா’ என்று பெயர். ஏழு குதிரைகள் சூரியனின் தேரை இழுத்துச் செல்கின்றன.
மாதம் ஒருமுறை ராசி விட்டு ராசி மாறி சஞ்சாரம் செய்வது சூரியனின் தொழில். இதனாலேயே இவர், குதிரையை வாகனமாகக் கொண்டுள்ளார். சூரியன் ஒவ்வொரு ராசியிலும் நுழையும் நாளே, தமிழ் மாத பிறப்பாக உள்ளது. உலகிலுள்ள உயிர்களுக்கு உணவளிக்கும் கடமை சூரியனிடமே உள்ளது.
இதனால் தான், உழவர்கள் அறுவடை முடிந்ததும் கிடைக்கும் முதல் நெல்லை, குத்திய பச்சரிசியால் பொங்கலிட்டு, சூரியனுக்கு படைத்து நன்றி தெரிவிக்கின்றனர். இந்த தை மாதத்தில், சூரிய பகவான் நம் அனைவருக்கும் நல்வழி காட்டுவார் !
இனிய பொங்கல் நல் வாழ்த்து,,,,,,
நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம்
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன எல்லோருக்கும் இனிய தைப்பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்……
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>






செவ்வாய், 3 ஜனவரி, 2017

இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் குழு மோதல் நால்வர் கைது!

வவுனியா கற்குழிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் குழு மோதல் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா கற்குழி பகுதியில் உள்ள இரு குழுக்களுக்கிடையில் முரண்பாடுகள் இருந்துள்ளது. புதுவருட தினத்தன்று
 ஒரு குழுவினர் தமது வீட்டில் பாட்டு போட்டு
 ஆடிக் கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த மற்றுமோர் குழுவினர் அங்கு வந்து பாட்டு போட்டு ஆடிக் கொண்டிருந்தவர்களுடன் முரண்பட்டுக் கொண்டதுடன் வாள், கம்பிகள், பொல்லு களால் அவர்கள் மீது தாக்கவும் 
முயற்சித்தனர்
இதனையடுத்து குறித்த வீட்டில் இருந்த பெண்கள் அதனை சமரசம் செய்ய முயற்சித்துள்ளனர். இதன்போது அங்கு வந்த இளைஞ ர்கள் வீடு புகுந்து தாக்க முற்பட்ட போது இடம்பெற்ற கைகலப்பில்
 இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதி க்கப்பட்டிருந்தனர். இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்திய வவுனியா பொலிசார் வாள்வெட்டு,
 குழுமோதல் தொடர்பில் நான்கு பேரை கைது செய்துள்ளதுடன் மேலும் மூவரை தேடி வருவதாகவும் தெரிவித்தனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


Blogger இயக்குவது.