திங்கள், 6 செப்டம்பர், 2021

நாட்டில் அவசரகால ஒழுங்கு விதிகள் தொடர்பான பிரேரணை செய்தி

அத்தியாவசிய உணவு பொருள் விநியோகத்திற்காக ஜனாதிபதியினால் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால ஒழுங்கு விதிகளை நிறைவேற்றுவதற்கான பிரேரணை நாடாளுமன்றில்.06-09-2021. இன்று முன்வைக்கப்படவுள்ளது.அது தொடர்பிலான விவாதம் இன்று முற்பகல் 10.30 முதல் இடம்பெறவுள்ள நிலையில், மாலை 4.30 மணிக்கு பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
எவ்வாறாயினும், ஜனாதிபதியினால் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட குறித்த அவசரகால ஒழுங்கு விதிகள் அடங்கிய பிரேரணையை எதிர்த்து வாக்களிக்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.அதன் தலைவர், அநுர குமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
சீனி மற்றும் அரிசியினை இறக்குமதியாளர்கள் பதுக்குவதால் நுகர்வோர் அசௌகரியத்திற்கு உள்ளாவதனால் அதனை தடுக்கும் விதத்தில் ஜனாதிபதியினால் அவசரகால ஒழுங்கு விதிகள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம்
 தெரிவிக்கிறது.
எனினும், அது நுகர்வோர் அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய மேற்கொள்ள முடியும்.இவ்வாறானதொரு சூழலில், அவசர கால ஒழுங்கு விதிகள் என அனைத்து அதிகாரத்தையும் ஜனாதிபதி பொறுப்பேற்றதற்கான காரணம் என்னவென நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க கேள்வி எழுப்பினார்.
இதேவேளை, வர்த்தமானியினால் அறிவிக்கப்பட்ட அவசரகால ஒழுங்கு விதிகளுக்கு எதிராக தமது தரப்பினர் வாக்களிக்கவுள்ளதாக எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.அதேநேரம், தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வாறு வாக்களிப்பது என்பது
 தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை என அதன் 
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.அது தொடர்பில்.06-09-2021. இன்று முற்பகல் கூடி தீர்மானிக்கவுள்ளதாக 
அவர் குறிப்பிட்டார்

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>



Blogger இயக்குவது.