செவ்வாய், 21 டிசம்பர், 2021

நாட்டில் பேக்கரி உணவு பொருட்களின் கட்டுப்பாடு விலை நீக்கம்

நாட்டில் இன்று நள்ளிரவு முதல் பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலை தொடர்பான எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த வெதுப்பக உற்பத்திகளுக்கான கேள்வி, நிரம்பல் என்பவற்றை அடிப்படையாக கொண்டு விலை தீர்மானிக்கப்படும் என அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>




திங்கள், 6 செப்டம்பர், 2021

நாட்டில் அவசரகால ஒழுங்கு விதிகள் தொடர்பான பிரேரணை செய்தி

அத்தியாவசிய உணவு பொருள் விநியோகத்திற்காக ஜனாதிபதியினால் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால ஒழுங்கு விதிகளை நிறைவேற்றுவதற்கான பிரேரணை நாடாளுமன்றில்.06-09-2021. இன்று முன்வைக்கப்படவுள்ளது.அது தொடர்பிலான விவாதம் இன்று முற்பகல் 10.30 முதல் இடம்பெறவுள்ள நிலையில், மாலை 4.30 மணிக்கு பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
எவ்வாறாயினும், ஜனாதிபதியினால் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட குறித்த அவசரகால ஒழுங்கு விதிகள் அடங்கிய பிரேரணையை எதிர்த்து வாக்களிக்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.அதன் தலைவர், அநுர குமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
சீனி மற்றும் அரிசியினை இறக்குமதியாளர்கள் பதுக்குவதால் நுகர்வோர் அசௌகரியத்திற்கு உள்ளாவதனால் அதனை தடுக்கும் விதத்தில் ஜனாதிபதியினால் அவசரகால ஒழுங்கு விதிகள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம்
 தெரிவிக்கிறது.
எனினும், அது நுகர்வோர் அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய மேற்கொள்ள முடியும்.இவ்வாறானதொரு சூழலில், அவசர கால ஒழுங்கு விதிகள் என அனைத்து அதிகாரத்தையும் ஜனாதிபதி பொறுப்பேற்றதற்கான காரணம் என்னவென நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க கேள்வி எழுப்பினார்.
இதேவேளை, வர்த்தமானியினால் அறிவிக்கப்பட்ட அவசரகால ஒழுங்கு விதிகளுக்கு எதிராக தமது தரப்பினர் வாக்களிக்கவுள்ளதாக எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.அதேநேரம், தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வாறு வாக்களிப்பது என்பது
 தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை என அதன் 
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.அது தொடர்பில்.06-09-2021. இன்று முற்பகல் கூடி தீர்மானிக்கவுள்ளதாக 
அவர் குறிப்பிட்டார்

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>



புதன், 25 ஆகஸ்ட், 2021

காங்கேசன்துறைக்கும் தமிழகம் இடையே விரைவில் பயணிகள் படகுசேவை

யாழ் – காங்கேசன்துறை  முதல் தமிழகம் வரை பயணிகள் படகுசேவையை தொடங்கும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
யாழ் – காங்கேசன்துறைக்கும்,கப்பல் முழு அதிகபட்ச நீளம் – 110 Mts மற்றும் அதிகபட்ச வரைவு – 8.5 Mts. பயணம் சேவைகள் 
– ஆண்டு முழுவதும் செயல்பாடு (SW மற்றும் NE பருவமழை உட்பட). இந்திய துறைமுகங்களை அழைப்பதற்கு பொருத்தமான
 வகைப்படுத்தப்பட்ட மற்றும் 
சான்றிதழ் பெற்ற படகு. துறைமுகத்தில் தரிக்கலாம்.
 தமிழகத்தின் – காரைக்காலுக்கும் இடையில் பயணிகள் படகுச்சேவையை ஆரம்பிக்க போக்குவரத்துக்கான கப்பல் சேவை வழங்குனர்களிடமிருந்து 
கேள்வி மனு இந்தியாவில் கோரப்பட்டுள்ளது. குறித்த கப்பல் சேவை வழங்குனர்களிடமிருந்து வாரத்தில் மூன்று 
நாட்கள் யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையில் இருந்து இந்தியாவின் காரைக்கால் துறைமுகம் வரை குறித்த சேவை வழங்கப்பட வேண்டும்.
கப்பல் முழு அதிகபட்ச நீளம் – 110 Mts மற்றும் அதிகபட்ச வரைவு – 8.5 Mts. பயணம் சேவைகள் – ஆண்டு முழுவதும் செயல்பாடு (SW மற்றும் NE பருவமழை உட்பட). இந்திய துறைமுகங்களை அழைப்பதற்கு பொருத்தமான வகைப்படுத்தப்பட்ட மற்றும் சான்றிதழ் பெற்ற படகு. 
துறைமுகத்தில் தரிக்கலாம்.
இதன் மூலம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகம், போக்குவரத்து, தொழில்நுட்பம் ஆகியவற்றை பரிமாறி கொள்ளும் ஒரு நடவடிக்கையின் அங்கமாக குறித்த செயற்திட்டம் இடம்பெறவுள்ளது. இதற்காக இந்திய மத்திய அரசின் சம்மதத்தை இந்தியாவின் பா.ஜ.க வின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மணிப்பூர் ஆளுநருமான இல. கணேசன் முன்னெடுத்து வருகிறார். 
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி அரச பிரதிநிதிகள் மற்றும் சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் ஆகியோர் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





புதன், 13 ஜனவரி, 2021

யாழில் :சுகாதாரத் துறையினரால் திரையரங்கங்களிற்கு பூட்டு வெளியானது மாஸ்டர்

நீண்ட இடைவெளயின் பின்னராக திரையரங்கில் விஜய்யின் மாஸ்டர் படம்
 13-01-2021.இன்று வெளியாகியுள்ள நிலையில் தியேட்டர்கள் தொடர்ச்சியாக இழுத்து மூடப்பட்டுவருகின்றன.
அவ்வகையில் சுகாதார நடைமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் நகரிலுள்ள செல்வா திரையரங்கு சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள செல்வா திரையரங்கே
 .13-01-2021.இன்று நண்பகல் முதல் சுகாதாரத் துறையினரால் 
மூடப்பட்டது.
கொரோனா தொற்று நிலைமைகள் காரணமாக நாட்டின் திரையரங்குகளில் இருக்கைகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் முழுமையான இருக்கைகளுக்காக பார்வையாளர்களை அனுமதித்து பற்றுச் சீட்டுக்களை விற்பனை செய்த குற்றச்சாட்டுக்காகவே இவ்வாறு திரையரங்கம் மூடப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

Blogger இயக்குவது.