சனி, 25 ஜூன், 2016

நான்கு வயது குழந்தை தனது இழந்த வலது கையை மீண்டும் பெற்றுள்ளார்!!! .

யாழ்ப்பாண வைத்தியசாலையில் பெரும் சாதனையொன்று
நிலை நாட்டப்பட்டுள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலையின் பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை நிபுணரின் 12 மணித்தியால அதி நுட்பம் வாய்ந்த சத்திரசிகிச்சை மூலம்  4 வயது குழந்தை தனது இழந்த வலது கையை மீண்டும் பெற்றுள்ளார்
இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
மன்னாரை சேர்ந்த நான்கு வயது ஆண் குழந்தை விளையாடிக்கொண்டிருந்தபோது,  வலது கையின்மீது  வீட்டு கூரைக்கு போடப்பட்டிருந்த தகரம் விழுந்துள்ளது.
இதனால் குழந்தையின் வலது கரம் முழங்கையின் கீழ் முற்றாக துண்டாடப்பட்டுள்ளது.
பதறிப்போன பெற்றோர் துண்டாடப்பட்ட கையுடன் சிறுவனை மன்னார் வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றுள்ளனர்
உடனடியாக துண்டாடப்பட்ட கையினை ஐஸ் கட்டியில் வைத்து மன்னார் வைத்தியசாலையிலிருந்து சிறுவன் யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டான்.
நள்ளிரவில் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட சிறுவனுக்கு உடனடியாக சத்திரசிகிச்சை  ஆரம்பிக்கப்பட்டது.
12மணித்தியாலங்கள் தொடர்ந்து செய்யப்பட்ட மிகவும் நுட்பங்கள் நிறைந்த சத்திரசிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தார் சத்திரசிகிச்சை நிபுணர் விபுல பெரேரா.
வெற்றிகரமாக முறிந்த எலும்புகளை லும்பு முறிவு சத்திரசிகிச்சை நிபுணர் சிறிகிறிஸ்ணா பொருத்திக்கொடுக்க தனது நிபுணத்துவ சிகிச்சையை தொடர்ந்துள்ளார் வைத்தியர் விபுல.
நரம்புகள்,  நாளங்கள்,  தசைகள் என்பவற்றை மிகவும் சிறப்பாக பொருத்துவதில் சிறப்பு தேர்ச்சிபெற்றவர்  வைத்தியர் விபுல என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் வெற்றிகரமாக பொருத்தப்பட்ட கைகளுடன் குறித்த சிறுவன் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
துண்டாடப்பட்ட கைகள் இணைக்கப்படும் சிகிச்சைகள் இலங்கையில் வேறுசில வைத்தியசாலைகளில் நடைபெற்றபோதிலும் கையின் பூரண செயற்பாடுகள் திரும்பபெறப்பட்ட சம்பவங்கள் மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
--


வெள்ளி, 24 ஜூன், 2016

சட்டவிரோதமாக இறைச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட ஆமைகள் மீட்பு!

கிளிநொச்சி ஆணைவிழுந்தான் பகுதியிலிருந்து இறைச்சிக்காக சட்டவிரோதமான முறையில் எடுத்த செல்லப்பட்ட 6 ஆமைகள் அக்கராயன் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று(வியாழக்கிழமை) இரவு 11 மணியளவில் பொலிசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த ஆமைகளை எடுத்து சென்ற நபர் ஒருவரும் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது மீட்கப்பட்ட ஆமைகளை கிளிநொச்சி
 மாவட்ட நீதவான்
 நீதிமன்றின் ஊடாக வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் இன்று(வெள்ளிக்கிழமை) கையளிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்
 தெரிவித்துள்ளனர்.
நாட்டில் அருகிவரும் உயிரினங்களான ஆமைகள், உடும்பு, மான், மரை உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடி இறைச்சிக்காக பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை
 குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



புதன், 22 ஜூன், 2016

தாய் மற்றும் 2 இரட்டை குழந்தைகள் கோர விபத்தில் பலி!!!

இலங்கையில் தெகியத்தைகண்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் தாய் மற்றும் 2 இரட்டை குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





செவ்வாய், 21 ஜூன், 2016

நவற்கிரி நிலாவரையில் ராஜா பிளாசா மாதிரிக்கிராமம்?

யாழ் ஈவினை மஸ்கன் சந்தி புத்தூர் மேற்கு  நவற்கிரியில் (நிலாவரைக் கேணிக்கு அருகாமை) தனி ஒரு பெரும் கொடையாளரால் அமைக்கப்பட்டுள்ளது ராஜா பிளாசா மாதிரிக்கிராமம். யாழ்ப்பாணத்தில் பல கோடிபதிகள் வாழ்ந்தாலும்
இவரைப்போன்ற சில வள்ளல்களின் உதவிகள் வாழ்வாதாரமற்ற ஏழைகளுக்கு பெரும் உபகாரமாக அமைகின்றதை மறுக்கமுடியாது. இக்காலத்தில் இப்படிப்பட்ட பேருதவிகளைச் செய்வோர் வெகு சிலரே.
எனவே இத்தகைய செயல்பாடுகளை நிச்சயம் நாம் வரவேற்றேயாகவேண்டும்.
மேலும் இக் கொடையாளரால் கோண்டாவில் கிராமத்திற்கு தபால் கந்தோருக்கான கட்டிடமும் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. 
இப்படி யாழ்மாவட்டதில் உள்ள எல்லாக் கிராமங்களும் அதே போல் தமிழர் பிரதேசங்களில் வாழ்கின்ற, வசிக்கும் இளைஞர்களும் தனவந்தர்களும் சிந்தித்து உதவிபுரிந்தால் நாம் எவரிடமும் கையேந்தவேண்டிய அவசியமேற்படாது..
இவரை இந்த இணையமும் நாமும் இணைந்து
 வாழ்த்துகின்றோம்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





வெள்ளி, 17 ஜூன், 2016

கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்று தமிழ் விழா.- 17.06.16-

யாழ்  கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில்  தமிழ் விழாவின் போது கலைநிகழ்வுகள்மிகசிறப்பாக   வெள்ளிக்கிழமை . 17.06.2016 .அன்று நடைபெற்று முடிந்த தமிழ் விழாப்படங்கள்  இணைப்பு  இந்த விழாவிற்கு 
 நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>






திரு திருமதி மதனராஜா தம்பதிகளின்தி ருமண நாளினை முன்னிட்டு!

டென்மார்க்கில் வசிக்கும் மதனராஜா சரோஜாதேவி தம்பதிகள் தமது 25 ஆவது திருமண நாளினை முன்னிட்டு பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு ஒரு லட்சம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்களை யாழ் மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கினர் எனவே தம்பதியினரை அனைவரும் வாழ்த்துவோம்.இனிய திரு மண நல் வாழ்த்துக்கள் 
 இறை அருள் பெற்று தம்பதியினர் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன, 
வாழ்கவளமுடன் .
தகவல் கந்தசாமி மனோகரன்
நவற்கிரி.கொம் செய்திகள் . >>> 







                            திரு திருமதி மதனராஜா தம்பதிகளிள்

இங்குஅழுத்தவும் உண்மைவிழிகள் செய்திகள் >>>

வியாழன், 16 ஜூன், 2016

அரச காணிகள்பலாலி வடக்கில் 104 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிப்பு!

 யாழ் பலாலி வடக்கில் மீள்குடியமர்வுக்குப் பதிவு செய்தவர்களில் காணிற்ற 104 குடும்பங்களுக்கு மாவட்ட செயலக காணிப் பிரிவினுாடாக தாலா 2 பரப்புக் காணி நன்பொடையாக பகிர்தளிக்கப்பட்டது. 
வலி வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பலாலி வடக்கு கடந்த டிசம்பர் 29ஆம் திகதி இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு தெல்லிப்பளை பிரதேச செயலரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

திங்கள், 13 ஜூன், 2016

ஆவரங்கல் விபத்தில் வயோதிபர் உட்பட மூவர் காயம்

 யாழ்-ஆவரங்கல் விபத்தில் வயோதிபர் உட்பட மூவர் காயம்
யாழ்ப்பாணம் - ஆவரங்கால் சிவன்கோவிலுக்கு அருகில் பருத்தித்துறை வீதியில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஊனமுற்ற வயோதிபர் உற்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
வயோதிபர் ஒருவர் ஊனமுற்றோருக்கான மூன்று சில்லு சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகமாக மோதியுள்ளது.
இதன் காரணமாகவே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மூவர் படுகாயமடைந்துள்ளதாகவும் சம்பவ இடத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் இருவரும் படுகாயமுற்றதால் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், வீதியோரம் காயங்களுடன் இருந்த ஊனமுற்ற வயோதிபருக்கு சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கையை யாரும் எடுக்கவில்லை எனவும்
 கூறப்படுகின்றது..



இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

ஞாயிறு, 12 ஜூன், 2016

பொதுவாக வரும் கஷ்டங்களை தவிர்ப்பது எப்படி?…

 ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில் நின்று கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல்படிக்கு உள்ளே இருந்து வாங்க வேண்டும் அல்லது கீழே இறங்கி வாங்க 
வேண்டும்.
* வாசல்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.
* இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்க கூடாது.
* வெற்றிலை, வாழை இலை இவைகளை வாடவிடக் கூடாது, வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.
* சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக் கூடாது.
* குத்து விளக்கை தானாக அணைய விடக்கூடாது, ஊதியும் அணைக்க்கூடாது. புஷ்பத்தினாலும் அணைக்க கூடாது.
* வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. இழவு என்றும் கூறக்கூடாது.
* அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்த கூடாது.
* துணிமணிகளை உடுத்திக் கொண்டே தைக்கக் கூடாது.
* உப்பைத் தரையில் சிந்தக் கூடாது. அரிசியைக் கழுவும் போது தரையில் சிந்தக் கூடாது.bothuva
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>
$

வெள்ளி, 10 ஜூன், 2016

ஆசிரிய கலாசாலையில்புதிதாக அனுமதி பெற்ற ஆசிரிய வரவேற்புபசார விழா

யாழ் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் புதிதாக அனுமதி பெற்ற 306 ஆசிரிய பயிலுநர்களுக்கான வரவேற்புபசார விழா கலாசாலை அதிபர் வீ. கருணலிங்கம் தலைமையில் 10.06.2016 காலை 
நடைபெற்றது.
இதில் பிரதம விருந்தினராக இந்தியத்துணைத் தூதர் ஸ்ரீமான் ஆறுமுகன் நடராஜனும் சிறப்பு விருந்தினராக கலாசாலையின் முன்னாள் அதிபர் வே.கா. கணபதிப்பிள்ளையும் விசேட விருந்தினராக மத்திய கல்வி அமைச்சின் ஆசிரிய கல்வி நிர்வாகப் பிரிவுக்கான உதவிக்கல்விப் பணிப்பாளர் இ.செந்தில்மாறனும் கலந்து கொண்டனர். கலாசாலையில் உள்ள யோகலிங்கேசுவரர் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசையைத் தொடர்ந்து விருந்தினர்களும் புதிய மாணவர்களும் ஊர்வலமாக விழா மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கலாசாலையின் பிரதி அதிபர் ச.லலீசன், உபஅதிபர் த.கோபாலகிருஷ்ணன், திசைமுகப்படுத்தல் பயிற்சி இணைப்பாளர் வே. திருச்சபேசன், மாணவர் மன்றக் காப்பாளர் பொ.சற்குணநாதன் அண்மையில் இளைப்பாறுகை பெற்ற விரிவுரையாளர் எம்.ஜே.எஸ். முத்துக்குமாரசாமி ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கினர். புதிய ஆசிரிய மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>


வியாழன், 9 ஜூன், 2016

கொழும்பு கோட்டையில் நிகழ்ந்த கோரச் சம்பவம்

இன்று மருதானையிலிருந்து காலி நோக்கி புறப்பட்ட ரயில் ஒன்றில் ஏற முற்பட்ட நபரொருவர் தவறி விழுந்தமையால் உடல்  பாகங்கள் இரண்டாக சிதைவடைந்து பலத்த காயங்களுக்கு
 உள்ளாகியுள்ளார். 
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

புதன், 8 ஜூன், 2016

றோமன் கத்தோலிக்க பாடசாலை ஆசிரியரினால் மின்சாரம் கண்டுபிடிப்பு .

நீர்வேலி றோமன் கத்தோலிக்க பாடசாலை விஞ்ஞான ஆசிரியரினால் வாழைத்தண்டில் இருந்து மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. L ED மின்குமிழ்களைப் பயன்படுத்தி 
வாழைத்தண்டில் 
உள்ள வாழைக்கயருடன் செப்புத்தகடுகள் தாக்கமடைந்து அதில் மின்சாரம் உருவாகுவது ஆசிரியரினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. திரு.ஆறுமுகம் பொன்வாசன் என்ற விஞ்ஞான பாட ஆசிரியராலேயே
 இக்கண்டு பிடிப்பு 
மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இந்த  அற்புதமான கண்டுபிடிப்பிற்காக அவ் ஆசிரியருக்கு எமது இணையங்களின்  பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>




இங்குஅழுத்தவும் உண்மைவிழிகள் செய்திகள் >>>

திங்கள், 6 ஜூன், 2016

கொஸ்கம ஆயுத களஞ்சியத் தீ! ஒருவர் பலி:45 பேர் காயம்!!

கொஸ்கம சலாவ இராணுவ முகாமின் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட தீ நள்ளிரவுடன் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த விபத்தில் வெடிபொருட்கள் வெடித்துச் சிதறியதில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்தார். அத்துடன் பொதுமக்கள் உட்பட 47 பேர் 
காயமடைந்தனர்.
 தீ விபத்துக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதையடுத்து 1 கிலோமீற்றர் சுற்றளவில் உள்ள வீடுகள் தவிர ஏனையவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர கீழே கிடக்கும் இனந்தெரியாத பொருட்களை தொட வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு 
எச்சரிக்கை 
விடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தீ விபத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இன்னமும் தெரியவில்லை எனத் தெரிவித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர இந்த விவரம் இன்றைக்குள் 
எப்படியும் தெரிய 
வரும் எனக் கூறினார். மேலும் வெடி விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய கால அவகாசம் தேவை என்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை தீ பற்றி எரிந்த ஆயுதக் கிடங்கே இலங்கை இராணுவத்தின் மிகப் பெரிய ஆயுதக் களஞ்சியமாகும். தவிர கனரக ஆயுதங்கள் களஞ்சியப்படுத்தப்படுவதும் இங்கேயே என்பதால் சேதங்கள் மிகப்பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. .
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>  .

சனி, 4 ஜூன், 2016

மூன்று மாதங்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையம் மூடல்?

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் பழுதுபார்க்கும் பணிகளுக்காக அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு மூடப்படவுள்ளது என்று விமான நிலைய நிர்வாகம் 
தெரிவித்துள்ளது.
அதன்பிரகாரம் 2017 ஜனவரி 6ஆம் திகதி முதல் 2017 ஏப்ரல் 6ஆம் திகதி வரை பகல் வேளைகளில் காலை 8.30 முதல் மாலை 4.30 வரை மாத்திரம் விமான நிலையம் மூடப்படும்.
அந்தக் காலப் பகுதியில் சகல விமானங்களினதும் வருகைகளும் புறப்படல்களும் இரத்துச் செய்யப்படும் எனவும்
 தெரிவிக்கப்படுகின்றது.
விமான நிலையம் இவ்வாறு மூடப்படுவது ஸ்ரீலங்கன் விமான சேவைக்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தும் என்று விமான நிலையத் தொழிற்சங்கங்கள் தமது கடும் ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளமை
 குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

வியாழன், 2 ஜூன், 2016

கத்திக்குத்தில் இளைஞன் ஒருவர் பலி : நால்வர் படுகாயம்

நெடுங்கேணி, ஊஞ்சல் கட்டிப் பகுதியில் நேற்றுப் பிற்பகல் (01,06,2016) உறவினர்களிக்கிடையே ஏற்ப்பட்ட குடும்பத் தகராறு காரணமாக கத்திக்குத்தில் இளைஞன் ஒருவன் மரணமடைந்துள்ளதுடன்,  நால்வர் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது வவுனியா நெடுங்கேணி ஊஞ்சல் கட்டிப் பகுதியில் அருகருகே வசிக்கும் உறவினர்களிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு கத்திக் குத்தாக மாறியுள்ளது.
வீடு ஒன்றில் ஏற்பட்ட இக் கைகலப்புச் சம்பவத்தில் கத்திக் குத்துக்கு இலக்காகி அந்தப் பகுதியைச் சேர்ந்த பழனியாண்டி ஜெயசீலன் (வயது 28) என்ற இளைஞன் மரணமடைந்துள்ளதுடன், இரு பெண்கள் உட்பட நால்வர் காயமடைந்து நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலின் போது பயன்படுத்தப்பட்ட தடிகள், வெற்று போத்தல்கள், கத்தி என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கத்திகுத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட நபரும் காயமடைந்த நிலையில் உள்ளதால் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, சம்பவ இடத்திற்கு வருகைத் தந்த வவுனியா மாவட்ட நீதிபதி லெனின்குமார் சம்பவம் நடைபெற்ற இடம் மற்றும் மரணமடைந்தவரின் சடலம் என்பவற்றையும் பார்வையிட்டு பிரதே பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>


புதன், 1 ஜூன், 2016

ஆடை அலங்கார கண்காட்சி மீண்டும் நுவரெலியாவில் !

நுவரெலியா குதிரை பந்தய திடல் தற்போது விளையாட்டுதுறை அமைச்சின் கீழ் ரோயல் டோர்ப் கழகத்தினால் அதி நவீன மயப்படுத்தப்பட்டு 
வருகின்றது.
குதிரை பந்தய ஓட்டம் வருடத்தில் ஏப்ரல் வசந்த காலத்தில் மாத்திரம் தான், என்ற நிலைமாறி வருடத்தில் பல தடவைகள் நடைபெற்று வருகின்றது.
இதன்போது பல சுவாரசியமான இசை நிகழ்ச்சிகள், நடனங்கள் உட்பட பல பொழுதுபோக்கு அம்சங்களும் நடைபெற்று
 வருகின்றன.
இவற்றில் ஒன்றான ஆடை அலங்கார போட்டியும் அடிக்கடி இடம்பெற்று வருகின்றது. அண்மையில் நடைபெற்ற குதிரை பந்தயத்தின் போது ஆடை அலங்காரமும் இடம்பெற்றுள்ளது.
இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மொடலின் பெண்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>


இங்குஅழுத்தவும் உண்மைவிழிகள் செய்திகள் >>>
Blogger இயக்குவது.