வியாழன், 2 ஜூன், 2016

கத்திக்குத்தில் இளைஞன் ஒருவர் பலி : நால்வர் படுகாயம்

நெடுங்கேணி, ஊஞ்சல் கட்டிப் பகுதியில் நேற்றுப் பிற்பகல் (01,06,2016) உறவினர்களிக்கிடையே ஏற்ப்பட்ட குடும்பத் தகராறு காரணமாக கத்திக்குத்தில் இளைஞன் ஒருவன் மரணமடைந்துள்ளதுடன்,  நால்வர் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது வவுனியா நெடுங்கேணி ஊஞ்சல் கட்டிப் பகுதியில் அருகருகே வசிக்கும் உறவினர்களிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு கத்திக் குத்தாக மாறியுள்ளது.
வீடு ஒன்றில் ஏற்பட்ட இக் கைகலப்புச் சம்பவத்தில் கத்திக் குத்துக்கு இலக்காகி அந்தப் பகுதியைச் சேர்ந்த பழனியாண்டி ஜெயசீலன் (வயது 28) என்ற இளைஞன் மரணமடைந்துள்ளதுடன், இரு பெண்கள் உட்பட நால்வர் காயமடைந்து நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலின் போது பயன்படுத்தப்பட்ட தடிகள், வெற்று போத்தல்கள், கத்தி என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கத்திகுத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட நபரும் காயமடைந்த நிலையில் உள்ளதால் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, சம்பவ இடத்திற்கு வருகைத் தந்த வவுனியா மாவட்ட நீதிபதி லெனின்குமார் சம்பவம் நடைபெற்ற இடம் மற்றும் மரணமடைந்தவரின் சடலம் என்பவற்றையும் பார்வையிட்டு பிரதே பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.