வியாழன், 6 அக்டோபர், 2016

செல்வி உமாசங்கர் ஜயனி 194 புள்ளிகளைப் பெற்று சாதனை!

எதிர்காலத்தில் ஜனாதிபதியாக உருவாகி நாட்டிற்குச் சேவை செய்வதே எனது இலட்சியம் என யாழ். மாவட்டத்தில் முதலாமிடம் பெற்ற சாதனை மாணவி உமாசங்கர் ஜயனி கூறினார்.
நடைபெற்று முடிந்த தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலையை சேர்ந்த செல்வி உமாசங்கர் ஜயனி 194 புள்ளிகளைப் பெற்று வடமாகாணத்தில் இரண்டாமிடத்தை பெற்றுள்ளார்.
தனது பெறுபேறு தொடர்பில் கருத்து வழங்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் புதிய அரசியல் யாப்பு உருவாகப்போகும் தருவாயில் இனச்சார்பற்ற மதச்சார்பற்ற புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படுமானால் மாணவியின் இந்த கனவு நிறைவேறக்கூடிய சாத்தியம் உள்ளது உண்மையே. சாதனை மாணவி ஜயனியைச் சந்தித்த போது அவர் கருத்துத்
 தெரிவிக்கையில்,

நான் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ். மாவட்டத்தில் முதலாமிடத்தையும், வடமாகாணத்தில் இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளேன்.
இதனை முன்னிட்டு நான் மிகவும் பெருமையடைகிறேன். எனக்குக் கல்வி கற்பித்த வகுப்பாசிரியர் திரு .க. செல்வவேல் ஆசிரியர் அவர்களுக்கும், முதலாம் தரத்தில் கல்வி கற்பித்த திருமதி. ரவிச்சந்திரன் ஆசிரியர் அவர்களுக்கும், என்னை மூன்றாம் தரம் மற்றும் நான்காம் தரத்தில் பெரிதும் ஊக்குவித்த திருமதி- சுபாஷினி ஆசிரியர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
அதுமட்டுமன்றி என்னைக் கல்வியில் ஊக்குவித்த தந்தை, தாயார் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றிகள். மற்றும் எனது சகோதரருக்கும் நன்றிகள். எனது வெற்றிக்குக் காரணமாக அமைந்த பாடசாலைச் சமூகத்திற்கும், அனைவருக்கும் நன்றிகள். எனது எதிர்கால இலட்சியம் இந்த நாட்டின் ஜனாதிபதியாக உருவாகி மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்பதே எனவும் 
தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.